ஒலிவடிவ வேதாகமம் Mp3 - மத்தேயு tamil audio bible mp3 - Mathew ( online streaming) - BibleUncle Evangelical Media

Sunday, 13 May 2012

ஒலிவடிவ வேதாகமம் Mp3 - மத்தேயு tamil audio bible mp3 - Mathew ( online streaming)
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும் நம்முடைய இரட்சகரின் வார்த்தைகள்யாவும் ஒழிந்துபோகாது என்று வேதம் சொல்லுகிறது, அப்படிப்பட்ட தேவ வார்த்தைகள் நம் இருதயத்தில் ஆழமாகப் பதியவும், நம்முடைய அன்றாட வாழ்க்கையை வேத வெளிச்சத்தில் நடத்தவும் உதவும் விதமாக மற்றுமொரு முயற்சியாக ஒலிவடிவ வேதாகமத்தை online ‍ ல் கேட்க வசதியாக இந்த புதிய பகுதி அறிமுகப்படுத்தப்படுகிறது,

கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.(சங் 1:2) என்று வேதம் சொல்லுகிறது, இரவும் பகலும் எந்த இடத்திலும் கர்த்தருடைய வேதத்தில் தியானமாக இருந்து, அதன்படி நடக்கிற மனிதர்களாக மாற இந்த முயற்சி ஒரு சிறு வித்தாக இருக்கும் என்று கர்த்தருக்குள் விசுவாசிக்கிறோம், கர்த்தருக்கு சித்தமானால் முழு புதிய ஏற்பாட்டையும், சங்கீதம், நீதிமொழிகள் புத்தகத்தையும் இதே வடிவத்தில் கொடுக்க விரும்புகிறோம், மேலும் ஒவ்வொரு புத்தகத்துக்குமான நூல் குறிப்பு, நோக்கம், ஆசிரியர் குறிப்பு, எழுதப்பட்ட கால சூழ்நிலை, மற்றும் அதிலுள்ள முக்கியமான சத்தியங்கள் ஆகியவற்றையும் அதே பகுதியில் எழுத முயற்சித்து வருகிறோம், இந்த முயற்சியை அதிக பிரயாசத்தின் மத்தியில் இலவசமாகவே செய்துமுடிக்க தேவன் உதவி செய்தார், சிறந்ததில் சிறந்த தொழில் நுட்பங்களை கொடுத்தார், அதற்காக தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம், இந்த முயற்சியைக் குறித்த உங்கள் கருத்துக்கள் ஆலோசனைகளை எங்களுக்கு எழுதுங்கள். இந்த முயற்சிக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள் நன்றி