திருப்பாதம் நம்பி வந்தேன்.. | Thirupatham Nambi ...(freddy joseph)-Tamil Christian Song Video & Lyrics - BibleUncle Evangelical Media

Friday, 21 January 2011

திருப்பாதம் நம்பி வந்தேன்.. | Thirupatham Nambi ...(freddy joseph)-Tamil Christian Song Video & Lyricsதிருப்பாதம் நம்பி வந்தேன் கிருபை நிறை இயேசுவே
தமதன்பைக் கண்டடைந்தேன் தேவ சமூகத்திலே

1. இளைப்பாறுதல் தரும் தேவா
களைத்தோரைத் தேற்றிடுமே
சிலுவை நிழல் எந்தன் தஞ்சம்
சுகமாய் அங்கு தங்கிடுவேன்

2. என்னை நோக்கிக் கூப்பிடு என்றீர்
இன்னல் துன்ப நேரத்திலும்
கருத்தாய் விசாரித்து என்றும்
கனிவோடென்னை நோக்கிடுமே

3. மனம் மாற மாந்தன் நீரல்ல
மன வேண்டுதல் கேட்டிடும்
எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தே
இயேசுவே உம்மை அண்டிடுவேன்

4. என்னைக் கைவிடாதிரும் நாதா
என்ன நிந்தை நேரிடினும்
உமக்காக யாவும் சகிப்பேன்
உமது பெலன் ஈந்திடுமே