கடும் புயலிலே .. | kadum puyalile...(freddy joseph)-Tamil Christian Song Video & Lyrics - BibleUncle Evangelical Media

Wednesday, 19 January 2011

கடும் புயலிலே .. | kadum puyalile...(freddy joseph)-Tamil Christian Song Video & Lyricsகடும் புயலிலே என்னைக்காத்தவரே
கண்ணின் மனிபோல காப்பவரே
தினம்தோறும் உம் கிருபையினால் வழி நடத்திடுமே


என் அன்பு நேசரே என் ஆருயிர் நண்பனே
வாழ்த்துவேன் வணங்குவேன் உம்மையே
என் வாழ்நாளெல்லாம் உமக்காய் ஜீவிப்பேன்
என் உயிருள்ள நாள்வரை உம்மைப் போற்றிடுவேன்

இந்த நாளின் ஒவ்வொரு செயலிலும்
உம் ஞானத்தால் என்னை நடத்துமே
நான் நடக்கும் வழிதனை காண்பித்து
ஆலோசனை சொல்லுமேன் - என் அன்பு

பழைய நினைவுகள் பிரசங்க நிகழ்ச்சிகள்
துயரமான பல தோல்விகள்
என்னை வாட்டுகின்ற வேளையில்
உம் சமூகத்தை நான் சாருவேன்

உடைந்த உறவுகள் மனதின் கசப்புகள்
என்னை நொறுக்கும் இதயத்தின் ஏக்கங்கள்
இருளாய் என்னை சூழ்கையில்
உம் பிரசண்ணம் தான் என் அடைக்கலம் - என் அன்பு