தேனினுமையிலும் இயேசுவின் நாமம்... -Tamil Christian Song Video & Lyrics - BibleUncle Evangelical Media

Saturday, 11 December 2010

தேனினுமையிலும் இயேசுவின் நாமம்... -Tamil Christian Song Video & Lyrics
தேனினுமையிலும் இயேசுவின் நாமம் திவ்ய மதுரமாமே
அதை தேடியே நாடி ஓடியே வருவாய் தினமும் நீ மனமே
தேனினுமையிலும் இயேசுவின் நாமம் திவ்ய மதுரமாமே

1* காசினிதனிலே நேசமதாக கஷ்டத்தை உட்தரித்தீர்
பாவ கசடதை அறுத்து சாபத்தை தொலைத்தார்
கண்டுணர் நீ மனமே
தேனினுமையிலும் இயேசுவின் நாமம் திவ்ய மதுரமாமே

2* பாவியை மீட்க தாவியே உயிரை தாமே ஈன்றவராம்
பின்னும் நேமியாம் கருணை நிலை வரம் உண்டு
நிதம் துதி என் மனமே
தேனினுமையிலும் இயேசுவின் நாமம் திவ்ய மதுரமாமே

3* காலையில் பனி போல் மாயமாய் உலகம்
உபாயமாய் நீங்கி விடும்
என்றும் கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு
கருத்தாய் நீ மனமே
தேனினுமையிலும் இயேசுவின் நாமம் திவ்ய மதுரமாமே

4* துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல துணைவராம் நேசரிடம்
நீயும் அன்பதாய் சேர்ந்தால் அணைத்துணை காப்பார்
ஆசை கொள் நீ மனமே
தேனினுமையிலும் இயேசுவின் நாமம் திவ்ய மதுரமாமே

5* பூலோகத்தாரும் மேலோகத்தாரும் புகழ்ந்து போற்றும் நாமம்
அதை பூண்டு கொண்டால் தான் புன்நகர் வாழ்வில் புகுவாய் நீமனமே

தேனினுமையிலும் இயேசுவின் நாமம் திவ்ய மதுரமாமே
அதை தேடியே நாடி ஓடியே வருவாய் தினமும் நீ மனமே
தேனினுமையிலும் இயேசுவின் நாமம் திவ்ய மதுரமாமே