சின்ன சிட்டு குருவியே /Chinna Chittu Kuruvi..- Tamil Christian Song Video & Lyrics - BibleUncle Evangelical Media

Saturday, 18 December 2010

சின்ன சிட்டு குருவியே /Chinna Chittu Kuruvi..- Tamil Christian Song Video & Lyrics


சின்ன சிட்டு குருவியே சின்ன சிட்டு குருவியே
உன்னை சந்தோஷமா படைச்சது யாரு?
அங்கும் இங்கும் பறந்துகிட்டு ஆனந்தமாய் பாடுறியே
உன்ன அழகாகப் படைச்சது யாரு (2)

ஐயோ ஐயோ இது தெரியாதா
ஒரு ஆண்டவர் எனக்கு மேலே இருக்கிறார்(2)
உண்ண உணவு கொடுக்கிறார் உறங்க இடமும் கொடுக்கிறார்
இந்த உலகத்தையே படைச்சு இருக்கிறார்(2)

சின்ன சிட்டு குருவியே சின்ன சிட்டு குருவியே
உன் சிறகை எனக்கு தந்திடுவாயா?
உன்னைப் போல பாடிக்கிட்டு உல்லாசமா பறக்கவே
ஒரு உதவி எனக்கு செய்திடுவாயா?

ஐயோ இனிமே அப்படிக் கேட்காதே
அந்த ஆண்டவன் கேட்டா கோவிச்சுகுவாரே(2)
எங்கள காக்கிற ஆண்டவர் உங்கள காப்பது இல்லையா
அவர் உங்களத் தானே ரொம்பவும் நேசிக்கிறார்(2)

ஆமா சிட்டுக் குருவியே ஆமா சிட்டுக் குருவியே
அது மனுசங்களுக்கு புரியவில்லையே
உங்கள காக்கிற ஆண்டவர் எங்கள காக்க மாட்டாரோ
இந்த உண்மையும் ஏனோ தெரிய‌வில்லையே

லா..லா..லா.. லல லா..லா..லா
லா...லா...லா... லல லா...லா...லா...
லா..லா..லா.. லல லா..லா..லா
லா...லா...லா... லல லா...லா...லா...