சோர்ந்து போகாதே ..(freddy joseph) -Tamil Christian Song Video & Lyrics - BibleUncle Evangelical Media

Tuesday, 14 September 2010

சோர்ந்து போகாதே ..(freddy joseph) -Tamil Christian Song Video & Lyrics
சோர்ந்து போகாதே என் நண்பனே

சோர்ந்து போகாதே என் நண்பனே மனம் உடைந்து போகாதே என் பிரியனே (2)
கடும் புயல் வரினும் காற்று வீசினும் நீ கலங்காதே மனமே (2)

இயேசு உன்னை தேற்றிடுவார் இயேசு உன்னைக் காத்திடுவார்
இயேசு உன்னை உயர்த்துவார் நண்பனே (both 2)

என் ஆத்ம நேசர் முன் செல்கையில் நான் என்றுமே அஞ்சிடேன் (2)
என் கரம் பிடித்து மகிமைதனில் அவர் தினமும் நடத்துவார் (2) - இயேசு உன்னை

நண்பர் உன்னை கைவிட்டாலும் நம்பினோர் உன்னைத் தள்ளிவிட்டாலும் (2)
மனம் கலங்காதே திகையாதே உன் இயேசு இருக்கின்றார் (2) - இயேசு உன்னை