நீ இல்லாத நாளெல்லாம்..- D.G.S Dinakaran Song Video & lyrics - BibleUncle Evangelical Media

Thursday, 9 September 2010

நீ இல்லாத நாளெல்லாம்..- D.G.S Dinakaran Song Video & lyricsநீ இல்லாத நாளெல்லாம்

நீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமோ?
நீ இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா?

உயிரின் ஊற்றே நீ ஆவாய்
உண்மையின் வழியே நீ ஆவாய்
உறவின் பிறப்பே நீ ஆவாய்
உள்ளத்தின் மகிழ்வே நீ ஆவாய்

எனது ஆற்றலும் நீ ஆவாய்
எனது வலிமையும் நீ ஆவாய்
எனது அரணும் நீ ஆவாய்
எனது கோட்டையும் நீ ஆவாய்

எனது நினைவும் நீ ஆவாய்
எனது மொழியும் நீ ஆவாய்
எனது மீட்பும் நீ ஆவாய்
எனது உயிர்ப்பும் நீ ஆவாய்