Subscribe Us

header ads

பைபிளை அறிவியல் பொய்யாக்கிவிட்டதா?அன்பானவர்களே
இன்று நாம் அறிவியல் யுகம் வளர்ச்சியடைந்த நாட்களில் இருக்கிறோம், இந்தக் காலகட்டத்தில் நாம் பூமி தேவனால் உண்டாக்கப்பட்டது என்று சொல்வதையும், பைபிளில் மனிதன் உருவாக்கப்பட்ட விதத்தையும், அதே போல குரங்கிலிருந்து மனிதன் தோண்றினான் என்று பரினாமக் கொள்கை பெருவாரியாக அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட நிலையில், பைபிள் சொல்வதை நம்மால் மட்டும் எப்படி நம்ப முடியும்? என்ற கேள்வி மிக மிகச் சாதாரணமானதுதான் இல்லையா?

அதே போல இந்த உலகம் படைக்கப்பட்டு ஆராயிரம்(6000) ஆண்டுகள் மட்டுமே ஆகிறது என்று பைபிள் சொல்லும் போது பல இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு புதைப்பட்ட டைனோசர்கள் போன்றவற்றின் படிமங்கள், கல்மரம், போன்ற பல தொன்மையான பொருடகள் சொல்லும் உண்மை என்ன? இந்த கேள்விகள் பைபிள் பொய் என்று தெளிவாகச் சொல்லப்பட்டு விட்டது என்று சந்தேகம் தோண்றுவதும் இயல்புதானே????

இப்படி நவீன அறிவியல் யுகம், ஒரு வரலாற்றுப் பெட்டகம் என நிரூபிக்கப்பட்ட பைபிளை எப்படி பழம் கட்டுக்கதை என்று சொல்வது முற்றிலும் தவறு என்று வேத அடிப்படையில் நான் சொன்னால் நீங்கள் இதை நம்பத் தயாரா?

இன்னும் கூட இன்று அறிவியல் கண்டுபிடித்த பல உண்மைகளை பைபிள் பல ஆயிரக்கனக்கான ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டது என்று சொன்னால் நீங்கள் நம்பத்தயாரா?

இவை எல்லாவற்றிற்கும் மேலாக முற்றிலும் புதிய செய்தி ஒன்று சொல்லுகிறேன் இதை நீங்கள் கஷ்டப்பட்டு நம்பிதான் ஆகவேண்டும் அது என்ன? அறிவியலும் பைபிளும் ஒரு ஒரே நேர்கோட்டில் தான் செல்கிறது.
இன்னும் சொல்லப்போனால் அறிவியல் வருங்காலத்தில் கண்டுபிடிக்கப்போகும் சில கண்டுபிடிப்புகளையும் வேதம் மிக மிக அழகாக சொல்லியிருக்கிறது என்றும் சொன்னால் இவன் ஏதோ உளருகிறான் என்று சொல்லிவிடாதீர்கள்

வேதாகம வசன ஆதாரத்துடன் இவற்றை தெளிவாகச் சொல்ல நான் தயார் படிக்கத் தயாராகுங்கள், புதிய பரிமானத்தில் வேதத்தை நீங்கள் பார்ப்பீர்கள் என்பதும் என்னால் உறுதியாக கிறிஸ்துவுக்குள் சொல்ல முடியும், காத்திருங்கள்..........

Post a comment

13 Comments

 1. நல்ல முயற்சி தொடருங்கள், தேவன் உங்களுக்கு ஞானத்தை வழங்க நான் பிராத்தனை செய்கிறேன்.

  ReplyDelete
 2. Juliet : All the Best Lord will help you

  ReplyDelete
 3. நல்ல முயற்சி தொடருங்கள் ஆர்வமாக இருக்கிறேன்

  ReplyDelete
 4. இப்படிப்பட்ட பதிவுகளைத்தான் நான் எதிர்பார்த்திருந்தேன். நல்ல முயற்சி. தொடர்ந்து எழுதுங்கள்.

  ReplyDelete
 5. உங்கள் ஆதரவுக்கும், ஊக்கத்திற்கும் நன்றி சகோதரர்களே

  ReplyDelete
 6. வாங்க மதத்தின் பெயரால் இருக்கும் குழப்பங்கள் போதாதுனு நீங்க வேறா வந்துயிருங்கிங்களா. பைபிள் வைத்து அறிவியலை விளக்க போறிங்களா. நல்லது. ஆமா இந்த பைபிள் சொல்லிறிங்க, எந்த பைபிலின் சொல்லாவே இல்லை, அதாவது கிர்ஸ்து மதத்தில் ஒவ்வரு பிரிவினரும் ஒவ்வரு பைபிலை பயன் படுதுரங்கலே அதுல நீங்க எந்த பைபிலுக்கு விள்க்கம் கொடுக்க வந்திஙக? ஒவ்வரு பிரிவிலும் இருக்கும் பைபிலில் வசனங்கலும், வர்த்தைகலும் , மாற்றமவும், விடுபட்டும் இருக்கே அதுதன் கேட்டேன், சரி அதவிடுங்க பைபிலை தொகுத்தவர்கள் 40 புனிதர்கலுனு சொல்லுறங்கலே, அவுங்கலை பற்றி சொல்லுஙக எந்த காலத்தில் வாழ்ந்தங்க, அவர்கள் அவர்களது பிற்ப்பு இற்ப்பு இப்படி தெறிந்தால் தானே அவர்கள் தொகுத்தது உண்மையான பைபிலானு தெறிந்து கொள்ள முடியும். கடவுள் பத்தி ஒரு ஒழ்க்காமான நடை முறை என்ன? அவர் எப்படி இருப்பார், அவரது தன்மை என்ன? ஏன் இதை கேட்டனா ஒரு மருத்துவர்னா அவ்ருக்கு சில தகுதி இருக்கும், மருத்துவர் இடதில் வேலை பார்க்கும் உதவியளர்களை எல்லாம் எப்படி மருத்துவர்னு சொல்லா முடியும், கடவுளை பத்தி சொல்ல வந்தவரே கடவுளாக்கி விட்டீர்களாமே, அந்த கதையெல்லாம் சொல்லுவீங்களா??

  ReplyDelete
 7. அன்பு ச‌கோதரே உங்களை அன்புடன் வறவேற்கிறேன், உங்களது கிறிஸ்துவை பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வத்தைக் கண்டு ஆண்டவருக்கு நன்றி செலுத்துகிறேன், கிறிஸ்துவுக்குள் ஆண் பெண் என்ற பிரிவினைகள் கூட இல்லை (கலா 3;28.29) பிரிவுகளைக் கடவுள் ஏற்றுக்கொள்வதில்லை, அவர் மதங்களைப் பார்த்து நேசிப்பவரல்லர், அவர் அன்பே வடிவானவர், இந்த உலகத்தில் இருக்கும் எல்லோருமே, ( நீங்கள், நான், மிகப்பெரிய பணக்காரகள், பரம ஏழைகள்) அவரது அன்பிற்குப் பாத்திரவான்கள் தான், அவரிடத்தில் தீமையானது ஒன்றும் இல்லை, தன்னைத் தேடி வேண்டுகிறவர்களுக்கு அவர் கட்டாயம் அவர் நன்மையானவைகளைத்தருவார்,

  ReplyDelete
 8. தங்களுடைய இன்னுமொரு கேள்வி கிறிஸ்தவ சபைகளில் காணப்படும் மொழி நடை மாற்றங்கள் குறித்ததானது, யாழ்பானத்தில் வசிக்கும் ஒருவருக்கும், சென்னையில் வசிக்கும் ஒருவருக்கும், உள்ள தமிழ் மொழி நடை வேறுபாடு போன்றது தான் இதுவும், அதற்காக இவர்கள் பேசும் தமிழில் உண்மைத் தமிழ் எது என்று நாம் விவாதிப்பது போன்றதான கேள்வி இது, இன்னும் விளக்கமாகச் சொன்னால், அவர்களது பன்பாட்டுக்கும், பழக்க வழக்கங்களுக்கும் தக்கதாக சொல்லைப் பயன்படுத்துவதில் வேறுபாடு இருக்கலாமே தவிர அடிப்படைப் பொருளில்(அர்த்தத்தில்) கண்டிப்பாக வேறுபாடுகள் இருக்க முடியாது (வேதகம வேறுபாடுகள் தொடர்பான அதிக விளக்கங்களுக்கு என்னுடைய பைபிள் வரலாறு பகுதியில் உள்ள பைபிளில் மறைக்கப்பட்ட நூல்கள் என்ற கட்டுரையைப் படியுங்கள்)

  பைபிளை எழுதியவர்கள் வரலாற்றைக் கேட்டிருந்தீர்கள், நேற்று இரவுதான் என்னுடைய ஜெபவேளையில் "ஆண்டவரே நான் அடுத்ததாக எந்த கட்டுரைத் தொடரை எழுதட்டும்" என்று ஜெபித்திருந்தேன், ஆண்டவ்ர் உங்கள் மூலமாக என்னோடு பேசியதற்காக அவருக்கு நன்றி செலுத்துகிறேன், உங்களது ஆவலைப் பூர்த்தி செய்ய ஆண்டவர் எனக்கு ஞானத்தை கொடுக்க நீங்களும் அவரிடம் வேண்டிக்கொள்ளுங்கள்,

  ReplyDelete
 9. மேலும் தாங்கள் பைபிளில் வார்த்தைகள் விடுபட்டிருப்பதாகச் சொன்னீர்கள், நான் ஆண்டவரை உண்மையாகப் புரிந்து கொள்ளாதவரை நானும் இப்படித்தான் நினைத்து மற்றவர்களோடு தற்கித்துக் கொண்டிருந்தேன்,( என்ன்னுடைய சாட்சியைப் படிக்க பகுதியில் உள்ள ஐ கிளிக் செய்ய்ங்கள்) ஆனால் அவரை உண்மையாக அறிந்து கொண்ட போது, ஜெபத்துடன் நான் வேதத்தை வாசிக்கும் போது, பரிசுத்த ஆவியானவர் என்னுடைய சிறு வயது சந்தேகங்களையும், புரியாமைகளையும், என் மனதோடு இருந்து என் சிற்றறிவுக்கு எட்டும் வகையில் கற்பிக்கிறார், அவரைபோன்ற ஒரு ஆசிரியரை நான் இதுவரை கண்டதில்லை, தாங்கள் வேண்டிக்கொண்டாலும் அவர் உங்கள் உள்ளத்தில் வாசமாயிருந்து உங்களுடைய எல்லா சூழ்னிலையையும் அவரே உங்களை வழி ந‌டத்துவார்,

  தாங்கள் இருக்கும் இடத்திலேயே கடவுளை நோக்கி, அப்பா என‌க்கு பரிசுத்த ஆவியானவரை எனக்குக் கொடுங்கள் என்று நீங்கள் வாஞ்சையோடும் உண்மையோடும் கேட்டால், கட்டாயமாகத் தருவதற்கு அவர் ஆவலாய் இருப்பதாக பைபிளில் சொல்லியிருக்கிறார், ஒருமுறை அவர் உங்கள் இருதயத்தில் வந்துவிட்டால் உங்கள் ச‌ந்தேகங்கள் எல்லாம் மாறிவிடும், புதிய வாழ்க்கையை உணர்வீர்கள், நானும் உங்களுக்காக வேண்டிக் கொள்கிறேன்,

  இருந்தவரும் இருக்கிறவரும் இனிவருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் ஆசீர்வதித்துக் காத்துக்ளொவாராக, ஆமென்.

  ReplyDelete
 10. //***கடவுளை பத்தி சொல்ல வந்தவரே கடவுளாக்கி விட்டீர்களாமே, அந்த கதையெல்லாம் சொல்லுவீங்களா?//***

  "என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்" என்று வேதம் சொல்லியிருக்கும் போது அதை மீறுவது கடவுள் பார்வையில் மிகக்கடுமையானது, மேலும் அவரை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ள வேண்டும் என்றும் பைபிள் சொல்லியிருக்கிறது சகோதரரே,

  ReplyDelete
 11. மன்னிக்கவும் சகோதரரே என் சாட்சியைப் பற்றிய தொடுப்பை அளிக்க மறந்து விட்டேன் (http://unmaivazhi.blogspot.com/2009/01/blog-post.html)

  Thanks
  Rajkumar

  ReplyDelete