Subscribe Us

header ads

பொது மொழிபெயர்ப்பு


அன்பானவர்களே
பைபிள் உருவானது பற்றியும், அது தமிழில் மொழியாக்கம் செய்தது பற்றியும் கண்டோம், இதில் மிக முக்கியமாக ஒரு விசயத்தை சொல்ல வேண்டும்; அனேகர் தமிழ் வேதாகமத்தை மொழியாக்கம் செய்ய தங்கள் உயிரையும் தியாகம் செய்திருக்கிறார்கள். அவர்கள் பற்றிய செய்திகளையும், அவர்களது மொழியாக்கதையும் சொல்ல முடியாமைக்கு மிகவும் வருந்துகிறேன், (நுனிப்புல் மேய்வது போல படிப்பவர்களும், சில அடிப்படை உண்மைகளை அறிந்து கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தினால் தான்) மன்னித்துக் கொள்ளுங்கள்.

இந்த கட்டுரையில் மிக முக்கியமான புதிய மொழி பெயர்ப்பைப்பற்றி காண்போம்;

மறைதிரு ராஜரீகம் (1907‍ 1978) 
இவர் நெல்லையில் பிறந்தவர், இவர் இறையியலில் இரண்டு பட்டங்களும், தமிழ் இலக்கியத்தில் இரண்டு பட்டங்களும் செற்றிருந்தார், தமிழ், ஆங்கிலம், எபிரெயம், கிரேக்கம் ஆகிய நான்கு மிழிகளில் புலமை பெற்றவர். இவரே பைபிளை நல்ல தமிழில் மொழிபெயர்த்த முதல் தமிழர்.

இவர் லுத்தரன் இறையியல் கல்லூரியின் முதல்வராகப் பொறுப்பேற்ற பின்பு இவருக்கு மொழியாக்கப்பணி கொடுக்கப்பட்டது. இதனால் தன் பனியைத் துற‌ந்து மொழியாக்கப்பணியை செய்யத் தொடங்கினார். இவரது குழுவில் பன்மொழி அறிஞர்களும், பன்னாட்டு இறையியல் மேதைகளும், இருந்தனர், நாள் ஒன்றுக்கு 18 மணி நேரம் வேலை செய்தார்.

இவர் இதற்கு முன் வந்த மொழியாக்கங்களைக் க‌ருத்தில் கொள்ளாமல் முற்றிலும் புதிய எளிய தமிழ் நடையில் மொழிபயர்ப்பு செய்தார். இவர் தலைமையில் அமைக்கப்பட்ட்ட குழுவால் 1975 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பகுதி வெளிவந்தது. முதலில் நான்கு சுவிஷேச நூல்களும், பின்னர் 1978ல் சங்கீதம் இனந்த புதிய ஏற்பாடும், மேலும் நீதிமொழிகள் 1976லும், ரூத் 1977லும் வெளிவந்தன. இவர் தனியாளாக பழைய ஏற்பாட்டை மொழிப்யர்த்து விட்டார், குழுவாக எசேக்கியேல் வரை மொழிபெயர்த்துவிட்டார்கள். ஆனால் ஆதியாகமம் அச்சில் இருந்த போது இடைவிடாத பணியால் ஓய்வெடுக்க முடியாமல் இருந்ததால் இரத்த அழுத்தம் அதிகமாகி முகுளத்தில் இரத்த நாளம் வெடித்து 1978ம் ஆண்டு ஜனவரி திங்கள் 24ம் நாள் உயிர் துறந்தார்,

அன்று முதல் இன்று வரை தமிழில் இவருக்கு இனையான அறிஞர் எவரும் இல்லாததால் இவர் விட்டுச் சென்ற பணி முடியாமல் கிடப்பில் போடப்பட்டு இருக்கிறது. இந்த பணி நிறைவடைந்தால் தமிழில் மிக மிக பொக்கிஷமாக ஓர் மொழி பெயர்ப்பு தமிழ் கிறிஸ்தவர்களாகிய நமக்கு கிடைக்கும். இதற்காக ஜெபித்துக் கொள்ளுங்கள்.

இது சீர்திருத்த கிறிஸ்தவர்கள், கத்தோலிக்கர்கள், ஆகிய இருவருக்கும் பொதுவானதாக வடிவமைக்கப் பட்டுள்ளதால் இதற்கு பொது மொழிபெயர்ப்பு என்று பெயர் வந்தது.

அன்பானவர்களே இந்த பைபிள் வரலாறு என்ற தொடர் பைபிள் குறித்த அனேக சந்தேகங்களையும், பைபிள் குறித்த நம்பகத்தன்மையையும் வளர்த்திருக்கும் என்று கிறிஸ்துவுக்குள் விசுவாசிக்கிறேன். இன்று அனேக முறையில் பைபிள்கள் வந்து விட்டன. நல்ல தமிழ் விளக்கங்கள்,ஒலிவடிவ பைபிள், குறுந்தகடாகவும், கைபேசியில் படிக்கவும் கேட்கவும் வசதிய்ள்ள வேதாகமம், இன்னும் மெமரி கார்டுகளில் அடக்கும் மிகச்சிரிய வடிவிலால பைபிள் மென்பொருட்களும் நம் தாய் மொழியிலேயே மிகவும் மலிவாக கிடைக்கப் பெறுகிறது, இனி வேதத்தை வாசிப்பதிலும் தியானிப்பதிலும் யாரும் சாக்கு போக்கு சொல்ல முடியாது... ஆனால் எதற்காக வேதத்தை வாசிக்க வேண்டும் என்று நாம் அறிந்து கொள்ளாதவரை வேதத்தை வாசிக்க வேண்டும் என்ற தாக்கம் நமக்குள் குறைவாகவே இருக்கும்,

எதற்காக வேதத்தை வாசிக்க வேண்டும்?
பைபிள் தேவனுடைய வார்த்தை தான் என்பதை ஆதாரங்களுடன் தெளிவாக அறிந்தோம், இந்த வார்த்தைகள் நமக்கும் இருந்தால் நாம் தீமைகளை அதிர்த்து நிற்க மிகவும் உதவியாய் இருக்கும், இயேசு கிற்ஸ்து கூட தன்னை சோதிக்க வந்த பிசாசை பைபிளின் மோசேயின் ஆகமத்திலுள்ள வச்னைங்களை வைத்து வெற்றி கொண்டார் என்று அறிகிறோம், இன்று சாத்தானின் வலையில் அனேகர் விழுந்து தங்கள் சமாதானத்தையும் நிம்மதியையும் தொலைத்துக் கொள்கிறார்கள் இவர்கள் இவர்கள் இம்மை வாழ்கையை மட்டுமல்ல இந்த உலக வாழ்க்கைக்குப் பின்னும் பரலோக ராஜ்ஜியத்தில் பங்குகொள்வதும் அறிதாகி, பிசாசுகளின் வதை கூடங்களாகிய நரகத்தில் பங்கடைவார்கள், இப்படிப்பட்ட நிலை நமக்கு வராமல் இருக்க வேண்டுமானால், பவுல் சொன்னது போல வேத வசனங்களை பிசாசுக்கு விரோதமான ஆயுதமாக பயன்படுத்தவே நாம் தினமும் வேதத்தை வாசித்து தியானிக்க வேண்டும். இனி தினமும் வேத வாசிப்பு உங்கள் வாழ்வின் அன்றாட செயல்களில் ஒன்றாக இருக்கட்டும் ஆமேன்.

இந்த கட்டுரையோடு பைபிள் வரலாறு என்ற தொடர் நிறைவடிகிறது மிக விரைவிலேயே ஓர் புதிய தலைப்பில் சந்திப்போம் காத்திருங்கள்...........

Post a comment

0 Comments