டிசம்பர்25 - BibleUncle Evangelical Media

Thursday, 24 September 2009

டிசம்பர்25

டிசம்பர்25


(ஆலய ஆராதனையின் போது)
பிரசங்க நேரத்தில்
ஆலய சிவப்பு கம்பளத்தில் பெண்களின் சிறப்பு
ஆடை அலங்கார அணி வகுப்பு நடைபெறும்


(பெண்கள் பகுதியில் மகளும் தாயும்)
அம்மா ஆயரம்மாவின்
நகாசுப்பட்டு super, newyear night இதுபோல்
pink கலரில் நான் அணிந்து கொன்டால் எடுப்பாக இருக்கும்


(ஆலய சுற்றுச்சுவரில் இரு வலிபர்கள்)
மாப்ள இன்னைக்கு நைட்
பஞ்சாபி ஹோட்டலில் party இருக்கு வந்துரு
காசைபத்தி கவலப்படாதே யூத் ஃபன்ட் இருக்கு


(திருவிருந்து ஆய‌த்த‌பாட‌லின் போது இருவ‌ர்)
திருவிருந்து Newyear நைட் எடுத்துக்க‌லாம்
இன்னைக்கு T.V.ல கிறிஸ்மஸ் சிற‌ப்பு திரைப்ப‌ட‌ம்
சீக்கிர‌ம் போக‌லாம் வா


(ஆல‌ய வாச‌லில் போட்டி ச‌பைக்குழுவின் துன்டுச்சீட்டு)
கிறிஸ்துவுக்குள் அன்பான‌வ‌ர்க‌ளே
மாலை ப‌ள்ளி மைதான‌த்தில் பேசன் ஆஃப் கிறைஸ்ட் திரைப்ப‌ட‌ம்
பின்குறிப்பு; வ‌ரும் அனைவ‌ருக்கும் ஐஸ்க்ரீம் கூப்ப‌ன் இல‌வ‌சம்


(ம‌திய‌ம் கிறிஸ்துவ‌ வீடுக‌ளின் வ‌ச‌ன‌ம்)
இதோ ச‌கோத‌ர‌ர்க‌ள் ஒருமித்து
பிரியானியும் வ‌ருவ‌லும் சாப்பிடுவ‌து
எத்த‌னைசுவையும்இன்ப‌முமானது


(மாலை, ஆல‌ய மைதான‌த்தில்)
ம‌திப்புகுறிய ஆயர் அவர்கள் தொட‌ங்கிவைக்கும்
பிழைப்புகாக‌ பாடுப‌வ‌ர்க‌ளின் இன்னிசை நிக‌ழ்ச்சி
முத‌ல் பாட‌ல் ''எனையாளும் மேரிமாதா துனை நீயே மேரி மாதா''
கிறிஸ்த்துவ‌ர்க‌ளின் கிறிஸ்துபிற‌ப்பு விழாவில்
கிறிஸ்துவுக்குத்தான் இட‌மில்லை
இயேசு, நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்.
(லூக்கா 9:58 )