Subscribe Us

header ads

பைபிளில் மறைக்கப்பட்ட நூல்கள்


பைபிளில் மறைக்கப்பட்ட நூல்கள்

இதுவரை நாம் பைபிள் குறித்து விரிவாகப்பார்த்து வந்தோம் இப்போது மிகவும் முக்கியமான பகுதிக்குள் கடந்து வந்திருக்கிறோம், அதாவது கத்தோலிக்க வேதாகமத்த்தில் உள்ள சில புத்தகங்கள் மறுமலர்ச்சி கிறிஸ்தவர்கள் வேதாகமத்தில் இல்லாமல் இருப்பதற்கான ஒரு முக்கியமான வரலாற்று உண்மையை அறிந்துகொள்ள இருக்கிறோம்.

இதற்கு முன்பாக கேனான் (Canan) என்ற சொல்குறித்து அறிந்துகொள்வோம், இந்த சொல் இந்த வேறுபாட்டிற்கு ஒரு முக்கியமான சொல் (இது கேமரா நிறுவனத்தின் பெயர் அல்ல) ஆகும், கேனான் என்பது நானல் குச்சி என்பது அர்த்தமாகும் பழைய ஏற்ப்பாட்டில் எஸ்ரா பல்வேறு காலகட்ட்த்தில் எழுத்தப்பட்ட நூல்களைத் தொகுத்ததாகக் காண்கிறோம். அப்போது எஸ்ரா அமைத்த குழுவுக்கு எழுதுவதற்குப் பயன்படும் "நானல் குச்சி" என்ற பொருளுடைய கேனான் என்று வைத்தார்கள்,

எஸ்ரா தொகுத்த பழைய ஏற்பாட்டு பாலஸ்தீன் நாட்டில் உள்ள யூதர்கள் மத்தியில் புழக்கத்தில் இருந்தது, அது கிரேக்க மொழி பெயர்ப்பில் 22 ஆகமங்களாக பிரிக்கப்பட்டிருந்த்து என்ன புதுசா குழப்பரீங்கன்னு நீங்க கேட்பது புரிகிறது, எஸ்ரா தொகுக்கும் போது நியாயாதிபதிகளும் ரூத்தும் ஒன்றாக இருந்த்து, எரேமியாவும் புலமபலும் ஒன்றாக இருந்த்து சிறிய தீர்க்கதரிசிகள் பனிரெண்டு புத்தகங்களும் ஒன்றாக இருந்த்து அதுபோல் சாமுவேலும் ராஜாக்கள் புத்தகமும் ஒன்றாக இருந்தது, எனவே பாலஸ்தீனாவில் புலக்கத்திலிருந்த இந்த 22 ஆகமங்களும் கிரேக்க தொகுப்பின் போது 39 ஆகப் பிரிக்கப்பட்ட்து இதைத்தான் பாலஸ்தீன் யூதர்கள் ஏற்றுக்கொள்கின்றனர், இந்த அடிப்படியில் தான் புரோட்டஸ்டண்ட்கள் பயன்படுத்தும் பைபிளில் பழைய ஏற்பாட்டில் தொகுக்கப்பட்டுள்ளது,

அப்படியானால் கூடுதல் ஆகமங்கள் எப்படி வந்தன?
பழைய ஏற்பாட்டின் கடைசி புத்தகமான மல்கியாவிற்கும் இயேசு கிறிஸ்துவின் காலத்திற்கும் சுமார் 400 ஆண்டுகள் இடைவெளி இருந்தது, அக்காலகட்டம் பெர்சியா ஆட்சியின் கடைசிக் காலகட்டமாகும், அதேபோல கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்களின் ஆட்சியின் தொடக்க்காலமாகும் இக்காலகட்ட்த்தில் யூதர்கள் வேறு நாடுகளுக்கு சிதறடிக்கப்பட்டனர், அப்போது எகிப்து நாட்டின் அலெக்ஸ்சான்ட்ரியா நாட்டில் குடிபெயர்ந்த யூதர்கள் செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தனர், அக்காலகட்டத்தில் அவர்கள் குடிபெயரும் போது சில நற்போதனைப் புத்தங்களையும் எடுத்துச் சென்றனர். மேலும், அந்த நானூறு ஆண்டுகால வரலாற்று நூலான 1மக்க பேயர், 11மக்கபேயர், ஆகிய 14 நூல்களை மொத்தமாக மொழி பெயர்த்து விட்டனர் இந்த நூல்களே கத்தோலிக்க வேத்த்தில் உள்ள அதிகப்படியான ஆகமங்களாகும்,

அவை யாவை?

1 மக்க பேயர்

11 மக்க பேயர்

தோபீத்- நேசக்கதைகள்

யூதீத்து- நேசக்கதைகள்

மனாசேயின் ஜெபம்- அழகிய சங்கீதம்

1 எஸ்ட்ராஸ்-தரிசன நூல்

11 எஸ்ட்ராஸ்-தரிசன நூல்

எஸ்தர் சரித்திரம்- இனைப்பு

மூன்று வாலிபரின் பாடல்-

பேலும், வலுசர்பமும்,-

பாருக்-போதனை

சீராக்கின் ஞானம் –

எரேமியாவின் நிருபம் –

(வரிசைப்படி எழுதவில்லை)

இந்த இடைச்செருகல் நூல்களை கத்தோலிக்கர்கள் எதிர்க்காமல் சில மாறுபாடுகளுடன் தங்கள் பைபிளில் இனைத்துக் கொண்டனர், ஆனால் 1546-ஆம் ஆண்டு கூடிய கத்தோலிக்க “ட்ரெண்ட்” மகா சபை இந்த கூடுதல் ஆகமங்களை ” மறைக்கப்பட்ட புனித நூல்கள் என்று பிரகடனப்படுத்தியுள்ளது...

இவைகளில் முரன்பாடுகள் உள்ளதா? இவைகளைப் படிக்கலாமா?

இவைகளில் எந்தவிதமான முரன்பட்ட கருத்துக்களும் இல்லை, இதே போல் மற்ற 39 ஆகமங்களில் சொல்லப்படாத எந்தவிதமான புதிய தகவல்களோ செய்திகளோ இல்லை, இவைகளைப் படிப்பதோ, அல்லது படிக்காமல் விட்டு விடுவதோ உங்கள் விருப்பம். இவைகளைப் படித்தால் நீங்கள் ஒன்றும் புதிதாக அறிந்துகொள்ளப்போவதில்லை, அதே சமயம் படிக்காமல் விட்டாலும் நீங்கள் இழக்கப்போவது எதுவுமில்லை,

அன்பானவர்களே, அடுத்து வரவிருக்கும் பதிவு புதிய ஏற்பாடுகளுக்கான சர்ச்சைகள் மற்றும் அவை உண்மையானவைகளா? நம்பத்தகுந்தவைகளா? போன்றவற்றிற்கு விடைகான முயலும் பதிவு தொடர்த்து படித்து பயனடையுங்கள்...

Post a comment

1 Comments

  1. நல்ல தகவல்களை எல்லோருக்கும் அறியத்தருகிறீர்கள்! அதற்கு நன்றிகள். தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete