Subscribe Us

header ads

பைபிளில் புதிய உடன்படிக்கை யாரோடு செய்யப்பட்டுள்ளது?


அன்பானவர்களே பைபிளில் ஏற்பாடு என்ற சொல்லுக்கு உடண்படிக்கை எனபதை முந்தைய கட்டுரையில் அறிந்தோம், மேலும் பழைய உடண்படிக்கை பன்டைய மெசபடோமியா நாகரீகத்தில் வாழ்ந்து வந்த ஆபிரகாம் என்ற பக்திமானோடு செய்யப்பட்டது என அறிந்தோம், இனி புதிய ஏற்பாடு(உடன்படிக்கை) பற்றி இங்கே காண்போம்,

புதிய உடன்படிக்கை யாரால் ஏற்படுத்த‌ப்பட்டது?
நாம் பழைய உடன்படிக்கை பற்றிய முந்தைய கட்டுரையில் ஆபிரகாமுடன் கடவுள் செய்து கொண்ட ஒப்பந்ததின் படி, கடவுளின் எதிர்பார்ப்புப்படி வாழ்ந்த ஆபிரகாமின் வம்சத்தில் வந்த யூத குலத்தில் உலகமக்களின் பாவத்திற்கு பலியாகி உலகமக்களின் நல்வாழ்கையை உறுதி செய்ய அனுப்பப்பட்ட மேசியாவாகிய இயேசு கிறிஸ்துவே புதிய உடன்படிக்கைக்கான ஆதாரம், அவரே இந்தப் புதிய உடன்படிக்கையை ஏற்படுத்தினார்.

புதிய உடன்படிக்கையில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது?
புதிய உடன்படிக்கை என்பது மனித இனத்திற்கு ஒரு மிகப்பெரிய கிடைப்பதற்கரிய ஓர் ஒப்பற்ற சொத்து ஆகும், இதில் மனிதன் சாகாமல் நித்தியமான வாழ்வு பெற்றுக்கொள்ள முடியும், எப்படி ஒன்றும் புரியவில்லையா? மேலே படியுங்கள் புரிந்துவிடும், அதாவது கடவுள் பரிசுத்தமாய்ப் படைத்த மனிதனின் வாழ்வில் பிசாசு மனித இனத்தில் பாவம் என்ற நஞ்சை விதைத்தான். இதனால் மனிதன் திருடு, பொய், சூது அன்பின்மை, விபசாரம், போன்ற பாவங்களில் விழுந்தான், அவனுடைய பாவத்தினால் மனிதன் பாவத்தின் சம்பளமான தண்டனையை அடைந்து வந்தான், இதனால் மனமிறங்கிய கடவுள் மனிதனின் பாவங்களுக்காக தானே இந்த பூமிக்கு வந்து குற்றமில்லாதவராய் வாழ்ந்து மிகவும் சித்ரவதைப்பட்டு மான்டார், ஒரு மனிதன் தன் இயல்பிலேயே உள்ள தீய குண‌ங்களினால் செய்த குற்றங்களுக்குத் தண்டனை அடைய விரும்பமாட்டான், ஆகவே அவனது பாவங்களை இயேசுவிடம் ஒப்படைத்து விட்டால் இம்மையிலும் மறுமையிலும் அவன் அடையவேண்டிய தண்டனையிலிருந்து தப்பலாம்,
மனிதன் இந்த உடன்படிக்கையில் பங்குகொள்ளச் செய்யவேண்டியது என்ன‌?
இந்த உடன்படிக்கையில் பங்குள்ளவர்களாக மாற மனிதனிடம் கடவுள் எதிர்பார்ப்பது மிகவும் சிறியதாகும் அவை:

1. தேவக் குமாரனாம் இயேசுகிறிஸ்துவிடம் தாம் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களைக் கூறி மன்னிப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டும்

2. முன் கட்டுரையில் கண்ட பத்து கட்டளையோடு நம்மில் நாம் எவ்வளவு அன்பு செலுத்துகிறோமோ அப்படியே மற்றவர்களின் தவறுகளை மன்னித்து அவர்களிடம் அன்பு செலுத்த வேண்டும் இவையே மனிதன் இந்தப் புதிய உடன்படிக்கையில் பங்கு பெறச் செய்ய வேண்டியவை ஆகும்.


புதிய உடன்படிக்கையில் பங்கு பெற்றால் என்ன நன்மை?
இந்தப் புதிய உடன்படிக்கையில் மனிதன் பங்கு பெற்றால் பிசாசினால் உண்டாகும் தீமைகளான, பரம்பரைச்சாபம், நோய்கள், பற்றாக்குறைகள், நிம்மதியின்மை, சமாதானமற்ற நிலை, தீயப்பழக்கங்களுக்கு அடிமையாதல், இன்னும் பல தீமைகளிலிருந்து விடுதலை அடைய முடியும் மேலும் இந்த உலக வாழ்வின் முடிவில் மரனமில்ல நித்திய வாழ்வை அடைய முடியும்.

நித்திய வாழ்வு என்றால் என்ன‌?
அதென்ன நித்திய வாழ்வு என நீங்கள் கேட்பது புரிகிறது நீங்கள் பாவமற்றவராய் வாழ்ந்தால் உங்கள் உடலுக்கு மட்டுமே மரனம் வரும், உங்கள் ஆத்மாவிற்கு அல்ல உங்கள் ஆத்துமா கடவுளோடு இன்பமான பரிசுத்த நிலையில் சொல்ல முடியாத சமாதானத்தோடும் மகிழ்ச்சியோடும் முடிவிள்ளா நாட்களோடு இளைப்பாரும்.

இந்தப் புதிய உடன்படிக்கையில் பங்கு பெறாவிட்டால் என்ன ஆகும்?
நாம் கடவுளின் இந்தப் புதிய உடன்படிக்கையில் பங்குபெறாவிட்டால், அல்லது குறைந்த பட்சம் நம்செயல்களிலாவது இந்த உடன்படிக்கையைக் கைக்கொள்ளாவிட்டால் நாம் பிசாசின் பிடியில் இருப்போம் அப்போது திருடுதல், பொய்சொல்லுதல், விபச்சாரம் செய்தல், பெருமை, கொலை, போன்ற பாவங்களைச் செய்து பிசாசின் மகனாய் வாழ்ந்து சாபம், நோய்கள், சமாதானமின்மை, இன்னும் பல இன்னல்களை நாமும் நம் சந்ததியும் அனுபவிப்பதோடு மட்டுமல்ல இறப்பில் நித்திய இளைப்பாறுதலுக்குச் செல்லாமல் பிசாசினோடு இனைந்து கடவுளின் நியாயதீர்ப்புக்கு ஆளாகவேண்டும்,

இயேசுவை ஏற்றுக்கொண்டால் மட்டும் போதுமா?
இல்லை என்பது தான் பதில் நாம் நம் பாவங்களை இயேசு கிறிஸ்துவிடம் கொடுத்துவிட்டால் மட்டும் போதாது நம் செயலில் உடன் மேலே சொன்ன உடன்படிக்கையில் கடவுளின் எதிர்பார்ப்பையும் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும்.

இந்த புதிய உடன்படிக்கை யாருடன் செய்யப்பட்டுள்ளது?
இந்த உடன்படிக்கை இந்த உலகில் பிறந்த நம் ஒவ்வொருவரோடும் செய்யப்பட்டுள்ளது. சரி இதுவரை பைபிளில் இரு பெரும் பிரிவாகவுள்ள பழைய ஏற்பாடு மற்றும் பதிய ஏற்பாடு பற்றி சுருக்கமாகப் பார்த்தோம் இனி இந்த பைபிள் எப்படி யூத மக்களின் வழக்கு மொழிகளான அராமிக், எபிரெயம், கிரேக்கம், ஆகிய மொழிகளில் இருந்து உலக மொழிகளுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட மெய்சிலிர்க்க வைக்கும் வரலாற்றை அடுத்தக் கட்டுரையில் பார்க்கலாமா?


Post a comment

0 Comments