அல்லாஹ் என்றால் என்ன அர்த்தம்? - BibleUncle Evangelical Media

Saturday, 11 April 2009

அல்லாஹ் என்றால் என்ன அர்த்தம்?


சமீப காலங்களில் மலேசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பைபிள் யகோவா தேவனை அல்லாஹ் என்று குறிப்பிட்டதால் அந்த தடை செய்திருக்கிறது। அல்லாஹ் என்பது இஸ்லாமிய நண்பர்களின் கடவுளா? என்று ஆதாரம் திரட்டினால் அவ்வாறு இல்லை என்றே தோண்றுகிறது.காரணம் தமிழ் பைபிளில் உள்ள தேவன், போன்ற சொற்கள், இந்து மதத்திலும் கடவுளைக் குறிக்கப் பயன்படுகிறது, கர்த்தா(கர்த்தர்), என்று ஆளப்பட்டுள்ள சொல் கூட பொதுவான சொல்லாகவே இருக்கிறது, அதாவது அனைத்திற்கும் காரன கர்த்தா என பொருள் கொள்ளும் வகையில் இருக்கிறது. இது போலவே அல்லாஹ் எனற சொல்லும் ஆகும்

அதாவது அல்லா அல்லது அல்லாஹ் என்பது அல்-இலாஹ் என்பதாகும். அதாவது வணக்கத்திற்குத் தகுதியான ஒரே இறைவன் என்பது அதன் பொருள். கடவுள், குதா, காட் என்ற பதங்கள் வணங்கப்படுபவை என்ற பொருளில் அவ்வாறு கூறப்படுகின்றன. அதற்குச் சமமான பொருளை உடையதே அரபு மொழியில் உள்ள இலாஹ் என்ற பதம். வணங்கப்படுகின்ற எதனையும் இலாஹ் என்று கூறலாம். இலாஹ் என்ற பொதுப் பெயருடன் அல் என்ற குறிப்புப் பெயரும் சேர்ந்ததே அல்லாஹ் என்பதாகும் என்பது மொழியியல் வல்லுனர்களின் கூற்று. அல்லாஹ் என்னும் சொல் எந்த ஒரு பாலையும் குறிக்காது ( ஆண்,பெண்,பலவின் ).இந்நிலையிலேயே திருக்குர்ஆன் என்ற இசுலாமியர்களின் மறை அல்லாஹ் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்துகின்றது.
Edirne Eski Camii-க்கு வெளியே அல்லாஹ் என்ற எழுத்துகளும் ஒரு பெண்ணும்

'அல்லாஹ்' என்பது ஒரு மொழியின் வார்த்தையாகும். அதுவும் அசல் உச்சரிப்பிலிருந்து மருவி அரபு மக்களிடம் ஏற்றதாழ 4000 வருடங்களாக புழக்கத்தில் உள்ள ஒரு வார்த்தையாகும். அந்த அரபு மக்களின் பெரும்பான்மையானோர் தாங்கள் வணங்கி வந்த மண், மரம், மட்டை, கற்கள், இன்னப்பிற மரணித்த மனிதர்கள், நம்பி இருந்த தேவதைகள் இவைகள் அனைத்தையும் 'இலாஹ்' என்று குறிப்பிட்டு வந்தனர். இலாஹ் என்பது பிரிதொரு சொல்லாகும். இதற்கு 'வணங்கப்படும் கடவுள்' என்பது பொருள். பல வணங்கப்படுபவைகளை உருவாக்கிக் கொண்ட அவர்கள், இவை அனைத்தையும் கடந்து ஒரு பெரிய சக்தி இருக்கின்றது என்றும் அதற்கு அல்லாஹ் என்ற பெயரையும் சூட்டி வந்தார்கள். இவை அனைத்தையும் அந்த மக்களிடம் இஸ்லாம் வெளிப்படுவதற்கு முன்பிருந்த வரலாறாகும். இந்த அல்லாஹ் என்ற பெரிய கடவுள் கொள்கை சித்தாந்தம் அரபு மக்களிடம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலைபெற்ற ஒன்றாகும்.< ஆதாரம்:http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE>

ஆக தேவன், கர்த்தர், LOARD (land lord, my lord), போலவே அல்லாஹ் என்ற வார்த்தையும் இந்த பூமியில் பொதுவாக வழங்கப்படும் வணக்கத்திற்குரியவைகளை குறிக்கக்கூடிய ஒரு பொதுவான வழங்கு சொல்லே ஆகும்,