தோத்திரம் செய்வனே ரட்சகரை - BibleUncle Evangelical Media

Wednesday, 1 August 2007

தோத்திரம் செய்வனே ரட்சகரை


தோத்திரம் செய்வனே ரட்சகரை
தோத்திரம் செய்வேனே

அனுபல்லவி
பாத்திரமாக்க இம்மாத்ரம் கருணை வைத்த
பார்த்திபனை யூதக் கோத்திரனை என்றும்

சரணங்கள்
அன்னை மறி சுதனை புல் மீது
அமிழ்து கழுதவனை,
முனனணை மீதுற்ற சின்ன குமாரனை ,
முன்னுரை நூற்படி இந்நிலத் துற்றோனை

கந்தை போதிந்தவனை வானோர்களும்
வந்தடி பணிபவனை
மந்தையர்க் கானந்த மாட்சிய யளித்தோனை
வான பரன் என்னும் ஞான குண வானை

செம்பொன் னுருவானை தேசிகர்கள்
தேடும் குருவானை
அம்பர மேவிய உம்பர் கணத்தோடு
அன்பு பெற நின்று பைம் பொன் மலர் தூவி