நல்லாவி ஊற்றும் தேவா - BibleUncle Evangelical Media

Wednesday, 1 August 2007

நல்லாவி ஊற்றும் தேவா


பல்லவி
நல்லாவி ஊற்றும் தேவா
நற்கனி நான் தர நித்தம் துதி பாட
நல்லாவி ஊற்றும் தேவா

1. பெந்தேகொஸ்தே நாளிலே
   உந்தனாவி ஈந்தீரே
   இந்த வேலையில் இறங்கிடுவீரே
  விந்தை செய் விண் ஆவியே

2.மெத்த அசுத்தன் நானே
   சுத்தாவி கொண்டென்னையே
   சித்தம் வைத்தென்றும் சுத்தம் செய்வீரே
 
3.ஆவியின் கனி ஒன்பதும்
   மேவி நான் தந்திடவும்
    ஜீவியமெல்லாம் புவி மீதிலே
    சுவிசேடப் பணியாற்றவும்

4.பாவம் செய்யாதிருக்க
   பாரில் சாட்சி பகர
   பார் மீட்க வந்த பரமனையே
   பாரோர்க்கு எடுத்துரைக்க