கலியாணமாம் கலியாணம் கானாவூரு கலியாணம் - BibleUncle Evangelical Media

Wednesday, 1 August 2007

கலியாணமாம் கலியாணம் கானாவூரு கலியாணம்


கலியாணமாம் கலியாணம்
கானாவூரு கலியாணம்
கர்த்தன் இயேசு கனிவுடனே
கலந்து கொண்ட கலியாணம்
கலியாணமாம் கலியாணம் ஆ-ஆ-ஆ-

1.விருந்தினர்கள் விரும்பியே
அருந்த ரசமும் இல்லையே...
அறிந்த மரியாள் அவரிடம்
அறிவிக்கவே விரைந்தனள்

2.கருணை வள்ளல் இயேசுவும்
கனிவாய் நீரை ரசமதாய் ....
மாற்றி அனைவர் பசியையும்
ஆற்றி அருளை வழங்கினார்

3. இல்லறமாம் பாதையில்
இல்லை என்னும் வேளையில்
சொல்லிடுவீர் அவரிடம்
நல்லறமாய் வாழுவீர்