29.முத்துஉவமை - BibleUncle Evangelical Media

Tuesday, 1 February 2005

29.முத்துஉவமைமுத்துஉவமை
இயேசு பரலோக ராஜ்ஜியதை எப்படி அடைய முயற்சிக்க வேண்டும் என்பதை விளக்குவதற்காக கூறியதாகும் இது மத்தேயு 13:45-46 இல் கூறப்பட்டுள்ளது.

உவமை
வணிகர் ஒருவர் நல்முத்துகளைத் தேடிச் செல்கிறார். விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டவுடன் அவர் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அதை வாங்கிக்கொள்கிறார்.

பொருள்

இதில் முத்து பரலோகத்தை குறிக்கிறது. வியாபாரி தனது சொத்தனைத்தையும் விற்று முத்தை விலைக்கு வாங்குகிறான். அனால் முத்து அவன் வசம் வந்துவிட்ட படியால் அவன் முதல் இருந்ததைவிட செல்வந்தனாகிறான். இதில் கூறப்பட்டுள்ள உட்கருத்து யாதெனில் கிறிஸ்தவர்கள் இம்மைக்குரிய காரியங்களை இழந்தாவது அல்லது செலவளித்தாவது மிகப்பெருமதியான பரலோக ராஜ்ஜியததை தேடிக்கொள்ள வேண்டும் என்பதே. அழிந்து போகும் இவ்வுலக சொத்துக்களை பயன்படுத்தி அழியாத ப‌ர‌லோக‌ ராஜ்ஜிய‌த்தை தேடுபவன் புத்திமான் என்பது கருத்தாகும்.