22.நேர்மையற்ற நடுவரின் நீதி - BibleUncle Evangelical Media

Tuesday, 1 February 2005

22.நேர்மையற்ற நடுவரின் நீதி


நேர்மையற்ற நடுவரின் நீதி

இயேசு மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் எனபதை விளக்குவதற்காக கூறிய உவமையாகும். இது வேதத்தில் லூக்கா 18:1-9 இல் காணப்படுகிறது.

உவமை
ஒரு நகரில் நடுவர் ஒருவர் இருந்தார். அவர் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை; மக்களையும் மதிப்பதில்லை. அந்நகரில் கைம்பெண் ஒருவரும் இருந்தார். அவர் நடுவரிடம் போய், “என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும்” என்று கேட்டுக் கொண்டேயிருந்தார். நடுவரோ, நெடுங்காலமாய் எதுவும் செய்ய விரும்பவில்லை. பின்பு அவர், “நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை மக்களையும் மதிப்பதில்லை. என்றாலும் இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டிருப்பதால் நான் இவருக்கு நீதி வழங்குவேன். இல்லையானால் இவர் என் உயிரை வாங்கிக் கொண்டேயிருப்பார்” என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டு விதவைக்கு நீதி வழங்கினார்.
பொருள்
இது இடைவிடாமல் ஜெபம்பன்ன‌ வேண்டும் என்பதை விளக்குகிறது. ஒரு நேர்மையற்ற நடுவரே இப்படிச் செய்தால் கடவுள் தனது மக்களின் வேண்டுதல்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரா? என்பது உணர்த்தப்படுகிறது