01.வலை உவமை - BibleUncle Evangelical Media

Tuesday, 1 February 2005

01.வலை உவமை


வலை

பரலோக ராஜ்ஜியத்தை பற்றிய இயேசுவின் உவமையாகும். பரலோக ராஜ்ஜியத்தை பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம் என உவமையை ஆரம்பித்துள்ளார். இதில் கிறிஸ்தவரின் மூல நம்பிக்கைகளில் ஒன்றான உலக முடிவு அல்லது “இறுதி தீர்வின் நாள்” (நியாய தீர்ப்பின் நாள்) பற்றி கூறப்பட்டுள்ளது. உலக முடிவில் ‘நீதிமான்களை’ ‘தீயவரிடமிருந்து’ பிரிக்கும் நிகழ்ச்சியை விளக்குகிறார். இது மத்தேயு 13:47-53 இல் கூறப்பட்டுள்ளது.

உவமை
மீனவன் ஒருவன் கடலுக்கு சென்று மீன் பிடிப்பதற்காக வலையை கடலில் வீசுகின்றான். வலையில் மீன்கள் சேர்ந்தவுடன் எல்லா வகையான மீன்களையும் சேர்த்து வாரிக் கப்பலில் இட்டுக் கரைக்கு கொண்டு வருகின்றான். கரைக்கு வந்து நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பான். கெட்டவற்றை வெளியே எறிவர்.

கருத்து
இயேசு இவ்வுவமையின் பொருளை இவ்வாறு கூறுகிறார்: மீன் பிடிக்கும் நிகழ்ச்சி உலக முடிவு நாளாகும். மீனவர் வான தூதராவார்கள். அவர்கள் உலக முடிவில் உலகம் முழுவதும் சென்று நீதிமான்களிடமிருந்து தீயோரைப் பிரிப்பர். பின் தீயோரை தீச்சூளையில் தள்ளுவர். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்.

பின்னினைப்பு
இவற்றைக் கூறிய பின்னர் இயேசு மக்களை நோக்கி “இவற்றையெல்லாம் புரிந்து கொண்டீர்களா?” என்று கேட்கிறார். இது அவரது போதனைகள் கல்ந்துரையாடல் வடிவிலிருந்தது என்பதைத் தெளிவாக்குகிறது. பின்னர் அவர் மேலுள்ள கருத்தை வலியுறுத்தும் நோக்கில் இன்னுமொரு கதையை கூறுகின்றார். அது பின்வருமாறு தொடர்கிறது;

ஆகையால் பரலோக ராஜ்ஜியத்தை பற்றிக் கற்றுக்கொண்ட எல்லா மறைநூல் அறிஞரும் தம் கருவூலத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளரைப் போல் இருக்கின்றனர்” என்று அவர்களிடம் கூறினார். இவ்வாறே உலக முடிவிலும் வான‌வானதூதர் சென்று நேர்மையாளிடையேயிருந்து தீயோரைப் பிரிப்பர்.