Subscribe Us

header ads

38 எஸ்தர்


அகாஸ்வேரு
இந்தியா முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும் ஆட்சி செய்து வந்த ஆகாஸ்வேரு என்பவன் தன் தேசம் முழுவதுமுள்ள ஏராளமான பிரபுக்களையும் அழைத்து விருந்து ஒன்றை ஏற்படுத்தியிருந்தான். விருந்தின் முடிவில் தன் மனைவியும் மகாராணியுமான வஸ்தியை அறிமுகம் செய்து வைக்க அழைத்தான், ஆனால் அவள் அவனுக்கு கீழ்ப் படியாமல் விருந்து நடந்த இடத்திற்கு வராமல் போனாள். இதனால் நியாயம் விசாரிப்பவர்களோடு மன்னன் ஆலோசனை நடத்தினான்.

நியாயம் விசாரிப்புக்குழுவின் அறிக்கை
நியாயம் விசாரிப்பு அதிகாரிகள் ராணியின் செயல் நாட்டிலுள்ள பெண்களுக்கு முன்னுதாரனமாய் அமைந்துவிடக்கூடாது எனக்கருதி அவளைத் மகாராணி பதவியிலிருந்து தள்ளிவிட்டு விட்டு புதிய ரானியை மன்னன் ஏற்படுத்த வேண்டும் என அறிக்கை வெளியிட்டனர். அதன் பேரில் நாடு முழுவதும் அழகான கன்னிப் பெண்களைக் கொண்டு வந்து மன்னன் முன்னாள் நிறுத்தப் பட்டு மன்னனின் மனதிற்குப்பிடித்த பெண்ணை ராணியாக அறிவிக்க ஏற்பாடுகள் நடந்தன.

எஸ்தர்
சூசான் என்ற பிரபுவின் அரமனையில் மொர்தெகாய் என்னும் பேருள்ள ஒரு யூதன் இருந்தான். அவன் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யூதாவில் சிறைப்டிக்கப்பட்ட‌வர்களில் ஒருவனாயிருந்தான். அவன் தன் சிறிய தகப்பன் மகளாகிய‌ எஸ்தர் என்னும் அத்சாளை வளர்த்தான்; அவளுக்குத் பெற்றோர் இல்லை அந்தப் பெண் அழகானவளாயிருந்தாள்; ஆகாஸ்வேருவின் அரன்மனைக்குக் கொண்டுவரப்பட்ட பெண்களில் எஸ்தரும் ஒருவள்.

எஸ்தர் மகாராணியானாள்
எஸ்தர் மன்னனின் பார்வைக்கு மற்றவர்களைவிட அழகானவளாக கானப்பட்டபடியால் அவளை தன் மகாராணியாக ஆகாஸ்வேரு அறிவித்தான். ஆனாலும் தான் யூதப்பெண் எனபதை எஸ்தர் மன்னனுக்கு அறிவிக்காமல் இருந்தாள். எஸ்தரை வளர்த்து வந்த மொர்தெகாய் அரண்மனை வாசலில் வந்து தங்கினான்.

ஆமான்
ஆகாஸ்வேரு ஆமான் என்ற‌ பிர‌புவை த‌ன் பிர‌புக்க‌ள் அனைவ‌ரையும் விட‌ மேன‌மைப்ப‌டுத்தி அவ‌னை அனைவ‌ரும் வ‌ண‌ங்க வேண்டும் என‌ அறிவித்தான். இதனால் அனைவரும் அமானை வணங்க ஆரம்பித்தார்கள். அர‌ண்ம‌னை வாச‌லில் த‌ங்கியிருந்த‌ மொர்தெகாய் ம‌ட்டும் இஸ்ர‌வேல் க‌ட‌வுளைத்த‌விர‌ ஒருவ‌னையும் வ‌ண‌ங்காத‌வ‌ன், ஆகையால் அவ‌ன் ம‌ட்டும் ஆமானை வ‌ண‌ங்க‌வில்லை.

ஆமானின் தந்திரமான திட்டம்
ஆமானுக்கு மொர்தெகாய் தன்னை வணங்காதது மிகவும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது, மேலும் அவனைக் கொல்வது ஆமானுக்கு அற்பமாய்ப் பட்டது. எனவே தந்திரமாக யூதர்கள் அனைவரையும் கொல்ல மன்னனிடம் ” மன்னா நம் நாட்டில் ஒருவித மக்கள் நம் சட்டதிட்டங்களின் படி நடப்பதில்லை அவர்களை கூண்டோடு அழிக்க வேண்டும் அதற்கு உங்கள் உத்தரவு வேண்டும்,” எனக்கேட்டான் மேலும் அவ்வாறு உத்தரவு கொடுத்தால் மன்னனின் கஜானாவிற்கு ஏராளமான நன்கொடை தருவதாகவும் வேண்டினான். மன்னனும் அவனுக்கு முழு அதிகாரமும் கொடுத்து உத்தரவிட்டான். ஆமான் யூதர்கள் கொல்லப்படும் நாள் பற்றிய அறிவிப்பை நாடுமுழுவதும் அறிவிப்பு செய்ய உத்தரவிட்டான்.

எஸ்தரின் தயக்கம்
எஸ்தர் இந்த அறிவிப்பைக் கேட்டு மிகவும் கலங்கிப் போயிருந்தாள். மொர்தெகாய் மன்னனிடம் போய் பேசி யூதர்களைக் காப்பாற்றும்படி கேட்டுக்கொள். என அவளிடம் சொல்லியும். அவள் தயங்கினாள். பின்பு கடவுளின் மேல் பாரத்தைப்போட்டு நாட்டிலுள்ள இஸ்ரவேல் மக்கள் அனைவரையும், இந்தக் காரியத்திற்காக உபவாசம் இருக்கச் சொல்லிவிட்டு தானும் உபவாசம் செய்தாள்.

விருந்துக்கு அழைப்பு

பின்பு மன்னன் முன்னால் சென்றாள். அந்நாட்களில் அழைக்காமல் மன்னன் முன்னால் சென்றால் அது மன்னனை அவமைத்ததாகக் கூறி முன்னால் சென்றவர்களை கொல்லப்படுவார்கள். மன்னன் க‌ருணை காட்டினால் மட்டும் தப்பிக்கலாம். மன்னன் தன் மகாராணியின் மேல் அன்பு வைத்திருந்த படியால் அவள் முன்னாள் தன் பொற்செங்கோலை நீட்டினான். இது அவள் கொல்லப்படக்கூடாது என்பதைக் குறிக்கும். பின்பு அவள் மன்னனையும் தலைமை பிரபுவான ஆமானையும் விருந்துக்கு அழைத்தாள்.

மொர்தெகாயை கணம் பண்ண மன்னைன் யோசனை
அன்று மன்னனுக்கு தூக்கம் வராமையால் அரண்மனை நடவடிக்கைகளை எழுதும் புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தான், அப்போது மொர்தேகாய் மன்னனை கொல்ல வந்தவர்க‌ளைக் காட்டிக்கொடுத்த சம்பவம் இடம் பெற்றிருந்தது. இதற்காக மொர்தேகாய் கணம்பண்ண‌ப்பட‌வில்லை என அறிந்து அவனை கணம் பண்ண வேண்டும் என திட்டமிட்டான், இதற்கிடையே மொர்தெகாய் மீதுள்ள கோபத்தில் ஆமான் நாளை அவனை மன்னனிடம் சொல்லித் தூக்கில் போடவேண்டும் என என்னி ஒரு தூக்கு மரத்தை தயார் செய்தான்.

தலைகீழாய் மாறிய சூழ்நிலை
மறுநாள் காலை அரண்மனைக்கு மகாரானியின் விருந்துக்கு வந்த ஆமானிடம், மன்னன் “ஒருவனை கணப்படுத்த என்ன செய்ய வேண்டும்” என வினவினான். ஆமான் தன்னைத்தவிர யாரை கணம்பன்னப் போகிறார் என நினைத்து, மன்னனிடம் “கணம் பன்னப்படுகிறவருக்கு அரசவுடை தரிவித்து மன்னன் செல்லும் குதிரையில் வீதியுலா வரச் செய்ய வேண்டும்”. எனச் சொன்னான். உடனே மன்னன் உடனே “நீ அரண்மனை வாசலில் இருக்கும் மொர்தெகாயை நீ சொன்னபடி கணம் பன்னிவிட்டு வா” என ஆமானிடம் கட்டளையிட்டான். ஆமான் வெறுத்துப் போனான்.

ஆமானுக்குக் கண்ணி
இரண்டாம் நாள் விருந்தில் மன்னன் எஸ்தர் மகாராணியிடம் உனக்கு என்ன வேண்டும் கேள், என கேட்டான். அதற்கு மகாராணி நானும் என் இனமும் இன்னும் சில நாட்களில் ஒரு கயவனின் திட்டத்தால் கொல்லப்படப் போகிறோம், அதைத் தடுத்தால் அரசுக்குத்தான் நட்டம் ஏற்படும். என்றாள். மன்னன் கோபம் கொன்டு யாரந்த கயவன்? என்று கேட்டான். எஸ்தர் அது ஆமான் தான், எனச் சொன்னாள். ஆத்திரம் தாங்காத மன்னன் பூங்காவிற்கு எழுந்து உலாவ சென்றான்.

ஆமான் சிக்கிக்கொண்டான்
ஆமான் எஸ்தர் மகாரானியிடம், மன்னனிடம் பரிந்து பேச விண்ணப்பம் பண்ணிக்கொன்டிருந்தான். மேலும் அவன் எஸ்தரின் மஞ்சத்தில் விழுந்து கெஞ்சிக்கொண்டிருந்தான். அப்போது திரும்ப வந்த மன்னன் ஆமான் ராணியின் மஞ்சத்தில் கிடப்பதைப் பார்த்து மேலும் ஆத்திரம் கொண்டு அவனை தூக்கிலிட ஆணையிட்டான். ஆமான் தான் செய்து வைத்திருந்த தூக்குமரத்தில் தானே தொங்கவிடப்பட்டான்.

யூதர்கள் காப்பாற்ப்பட்டார்கள்
யூதர்கள் கொல்லப்பட வேண்டும் என ஆமானால் வெளியிடப்பட்ட அறிவிப்பை மன்னன் ரத்து செய்தான். யூத மக்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். மொர்தெகாய் அரண்மனையில் உயர்த்தப்பட்டான்.

Post a comment

0 Comments