34. ஆகாஸ் - BibleUncle Evangelical Media

Wednesday, 2 February 2000

34. ஆகாஸ்


யோதாம் எனவனின் குமாரன் ஆகாஸ் எனபவன் எருசலேமில் பதினாறு வருடங்கள் அரசாண்டான், அவன் தன் பாட்டன் தாவீதைப் போல் இல்லாமல். கடவுள் வெறுத்த அருவருப்பான மக்கள் செய்தபடி தன் மகனை தீயிற்கு கொடுத்தான். மேலும் அவன் மேடைகளிலும் மலைகளின்மேலும் பச்சையான சகல மரத்தின்கீழும் பலியிட்டுத் தூபங்காட்டி வந்தான். இதுபோல அவன் இஸ்ரவேலின் கடவுளுக்கு பொல்லாததான மீறுதல்களைச் செய்தான்.

எதிரிகள் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டான்

ஆகாஸ் கடவுளுக்கு விரோதமான காரியங்களை செய்தபடியால் அவன் சிரியாவின் அரசன் கையில் தோற்றுப் போனான். அப்போதும் திருந்தாத ஆகாஸ் இஸ்ரவேலரின் உண்மையான கடவுளின் உதவியை நாடாமல், அசீரியாவின் அரசனை தனக்கு உதவி செய்ய கையூட்டாக‌ கடவுளின் தேவாலயத்தில் இருந்த பொன் மற்றும் வெள்ளி பொருட்களை எடுத்து அசீரியாவின் மன்னனுக்கு அனுப்பினான். அசீரியாவின் மன்னனும் சிரியாவில் உள்ள தமஸ்குவிற்குப்போய் அந்தப் பட்டணத்தை வெற்றி கொண்டு அங்கிருந்த மக்களை சிறை பிடித்துக்கொண்டு போனான்.

ஆகாஸின் உச்சகட்ட மீறுதல்

ஆகாஸ் தானும் த‌ம‌ஸ்குவிற்கு போய் ப‌லிபீட‌த்தை க‌ட்டி அசீரிய‌ர்க‌ளின் க‌ட‌வுளுக்கு ந‌ன்றி சொன்னான், அசீரிய‌ர்க‌ளின் தெய்வ‌ம் அவ‌ர்க‌ள் வெற்றிபெற‌ உத‌வி செய்த‌து போல‌ த‌ன‌க்கும் உத‌வி செய்ய‌வேண்டும் என‌ வேண்டி த‌ன் நாட்டிலுள்ள எல்லாப் ப‌ட்ட‌ண‌ங்களிலும் அசீரிய தெய்வத்திற்கு பலிபீடங்களை கட்டி அத்டில் காலை ம‌திய‌ம் மாலை ஆகிய‌ நேர‌ங்க‌ளில் த‌வ‌றாம‌ல் ப‌லியிட‌ நிர்வாகிக‌ளை நிய‌மித்தான்.

அதோடு கூட நிற்காமல் இஸ்ர‌வேலர்களின் தேவால‌ய‌த்தின் ப‌னிமூட்டுக‌ளை துண்டுதுண்டாக்கினான். மேலும் தேவால‌ய‌த்தின் க‌த‌வுக‌ளைப் பூட்டி தாழிட்டான். அவ‌னுடைய வாழ்நாளெல்லாம் க‌ட‌வுளுக்கு பொல்லாத‌ காரிய‌ங்களைச் செய்தான்.