20.கானானில் இஸ்ரவேல் மக்கள் - BibleUncle Evangelical Media

Wednesday, 2 February 2000

20.கானானில் இஸ்ரவேல் மக்கள்


எரிகோ
யோசுவா எரிகோ மேல் படையெடுத்தான் எரிகோ அடைக்கப்பட்டு இருந்தது போக்குவரத்து ஏதுமில்லை யோசுவா கடவுள் சொன்னபடி இஸ்ரவேல் மக்கள் தினமும் ஒருமுறை எரிகோ கோட்டையை சுற்றி வர வேண்டும் எதுவும் பேசக்கூடாது இப்படி ஆறு நாள் செய்த பிறகு ஏழாம் நாள் எல்லோரும் எக்காளதோடு போய் ஒருமுறை சுற்றி வந்து எக்காளம் ஊதி ஆர்ப்பரிக்க வேண்டும் அப்போது கோட்டை சுவர் உடையும் எல்லோரும் உள்ளே செல்ல வேண்டும் என்று சொன்னான் இஸ்ரவேலரும் யோசுவா சொன்னபடியே செய்து வெற்றி பெற்றார்கள். மேலும் வேவு பார்க்க உதவிய வேசியையும் அவள் குடும்பத்தையும் விட்டுவிட்டு மற்றவர்களை கொலை செய்தார்கள்.

கடவுளின் கோபம்
இஸ்ரவேல் மக்களில் ஒருவன் கடவுளின் உடன்படிக்கையை மீறினான். அவன் சில பொருட்களை திருடிவிட்டான் இதனால் கடவுள் இஸ்ரவேலர்கள் மீது கோபம் கொன்டார்.

ஆயீபட்டனம்

அடுத்ததாக எரிகோவிற்கு கிழக்கே உள்ள ஆயிபட்டனத்திற்கு வேவு பார்க்க ஆள் அனுப்பினான். அவர்கள் திரும்பி வந்து. அவர்கள் மிகக் குறைவாகவே இருக்கிறார்கள், எனவே நாம் மூவாயிரம் பேர் மட்டும் போனால் போதும் என்று சொன்னார்கள். அவர்கள் சொன்னபடியே புற‌ப்பட்டு போனார்கள். ஆனால் தோற்றுப்போனார்கள்.
கால்வைத்த இடங்களிலெல்லாம் வெற்றி
யோசுவா கடவுளிடம் முறையிட்டான்; கடவுள் மீறுதலை வெளிப்படுத்தினார். பின்பு இஸ்ரவேல் மக்கள் அவனைக் கண்டு பிடித்துக் கொன்றார்கள். கடவுளின் கோபம் தனிந்தது, பிற்கு ஆயீ பட்டனத்தை வெற்றிகொன்டார்கள்

இப்படி கடவுளின் உதவியோடு கானான் முழுவதும் உள்ள முப்பத்தியொரு நாடுகளை வெற்றிகொண்டார்கள். அதன் பின் இஸ்ரவேலரின் பன்னிரன்டு கோத்திரத்தாரும் சீட்டுப்போட்டு கானானை பிரித்து குடியேறினார்கள்.
யோசுவா உயிரோடு இருந்த நாளெல்லாமும் அதன் பிறகு வெகு நாள்வரையிலும் இஸ்ரவேல் மக்கள் கடவுள் செய்த அற்புதங்களை நினைத்து அவரைப் போற்றினார்கள்.
எகிப்திலிருந்து கொன்டுவந்த யோசேப்பின் எலும்புகளை கானானில் அடக்கம் செய்தனர்.