Subscribe Us

header ads

19.யோசுவா


மோசேவின் முடிவு
மோசே இஸ்ரவேல் ம‌க்களைப் பார்த்து நான் நூற்றிருபது வயதுள்ளவன்; இனி நான் போக்கும் வரத்துமாயிருக்கக்கூடாது; மேலும் யோர்தானை நான் கடந்துபோவதில்லை என்று கடவுள் என்னோடே சொல்லியிருக்கிறார். கடவுள் சொல்லியபடி அவர் உங்கள் முன்னே போவார், எனவே நீங்கள் தைரியமாயிருங்கள் என்று சொன்னான்

யோசுவா தலைவரானான்
பின்பு இஸ்ரவேலர் எல்லாரும் பார்த்திருக்க, யோசுவாவை இஸ்ரேலியர்களை வழி நடத்தும் தலைவனாக நியமித்தான். பின்பு மோசே யோசுவாவை நோக்கி: நோக்கி பலங்கொண்டு திடமனதாயிரு; கட‌வுள் இவர்களுக்குக் கொடுப்பேன் என்று இவர்களுடைய பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்துக்கு நீ இவர்களை அழைத்துக்கொண்டபோய், அதை இவர்கள் சுதந்தரிக்கும்படிசெய்வாய்.மேலும் கடவுள் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம் என்றான்.

மோசே மரித்தான்
க‌டவுளின் தாசனாகிய மோசே மோவாப் நாட்டில் கடவுளுடைய வார்த்தையின்படியே மரித்தான். அவனை மோவாப் தேசத்திலுள்ள பெத்பேயோருக்கு எதிரான பள்ளத்தாக்கிலே அடக்கம்பண்ணினார். பின்பு கடவுள் யோசுவாவுக்கு தரிசனமாகி நீயும் இந்த மக்கள் எல்லாரும் எழுந்து, இந்த யோர்தானைக்கடந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு நான் கொடுக்கும் தேசத்துக்குப் போங்கள் நான் மோசேக்குச் சொன்னபடி உங்கள் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன் நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை, என்று கடவுள் அவனுக்கு வாக்கருளினார்.

யோசுவாவின் ஆனை
பின்பு யோசுவா மக்க‌களைப் பார்த்து, உங்களுக்குப் உணவுப் பதார்த்தங்களை ஆயத்தம்பண்ணுங்கள்; நம் கடவுள் நமக்கு சுதந்தரிக்கக் கொடுக்கும் தேசத்தை நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு, இன்னும் மூன்று நாளைக்குள்ளே இந்த யோர்தானைக் கடந்துபோவீர்கள் என்று சொன்னான்.

மக்களின் உறுதிமொழி
அதற்கு இஸ்ரவேல் மக்கள் யோசுவாவுக்குப் பிரதியுத்தரமாக, நீர் எங்களுக்குக் கட்டளையிடுகிறதையெல்லாம் செய்வோம்; நீர் எங்களை அனுப்பும் இடமெங்கும் போவோம். நாங்கள் மோசேக்குச் செவிகொடுத்ததுபோல உமக்கும் கீழ்படிவோம் என்று உறுதியளித்தனர்.

எரிகோ வேவுபார்க்கப்பட்டது
யோசுவா சித்தீமிலிருந்து வேவுகாரராகிய இரண்டு நபர்களை ரகசியமாய், நீங்கள் போய் தேசத்தையும் எரிகோவையும் வேவுபார்க்கும்படி அனுப்பினான் அவர்கள் ஒரு வேசியின் வீட்டுக்குள் பிரவேசித்து, அங்கே தங்கினார்கள். தேசத்தை வேவுபார்க்கும்படி, இஸ்ரவேல் புத்திரரில் சிலபேர் இந்த இரவில் வந்தார்கள் என்று எரிகோவின் அரசனுக்கு சொல்லப்பட்டது. அப்பொழுது அரசன் வேசியின் வீட்டுக்கு ஆள் அனுப்பி; உன் வீட்டுக்குள் பிரவேசித்த மனிதர்களை வெளியே கொண்டுவா; அவர்கள் நம்நாட்டை வேவுபார்க்கும்படி வந்தார்கள் என்று சொல்லச்சொன்னான். ஆனால் அப்பெண் அவர்களை காட்டிக்கொடுக்காமல் பாதுகாப்பாய் அனுப்பினாள் அவர்களும் நாற்பது நாள் கழித்து யோசுவாவிடம் சொன்னார்கள்

யோர்தான் அற்புதம்

இஸ்ரவேல் மக்கள் யோர்தான் ஆற்றின் அருகே வந்து சேர்ந்தார்கள் யோசுவா உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியரைப் பார்த்து, நீங்கள் யோர்தான் தண்ணீர் ஓரத்தில் சேரும்போது, யோர்தானில் நில்லுங்கள் என்று கட்டளையிட்டான்.யோர்தான் அறுப்புக்காலம் முழுவதும் கரைபுரண்டுபோம். பெட்டியைச்சுமக்கிற ஆசாரியர்களின் உள்ளங்கால்கள் யோர்தானின் தண்ணீரிலே பட்டமாத்திரத்தில், ஒரு குவியலாகக் குவிந்தது; உப்புக்கடலுக்கு ஓடிவருகிற தண்ணீர் பிரிந்து ஓடிற்று; அப்பொழுது ஜனங்கள் எரிகோவுக்கு எதிரே கடந்து போனார்கள்.இஸ்ரவேல் புத்திரர் கடந்து தீருமளவும், தண்ணீர் அப்படியே நின்றது
இதைக் கேள்விப்பட்ட‌ யோர்தானுக்கு மேல்கரையில் குடியிருந்த எமோரியரின் சகல அரச‌ர்களுக்கும் இருதயம் கரைந்து, இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாகச் சோர்ந்துபோனார்கள்.

இஸ்ரவேல் மக்களுக்கு கானானில் விருத்தசேதனம்
யோசுவா கருக்கான கத்திகளை உண்டாக்கி, இஸ்ரவேல் மக்களை ஆர்லோத் மேட்டிலே விருத்தசேதனம் பண்ணினான். யோசுவா இப்படி விருத்தசேதனம் பண்ணின காரனம் என்னவென்றால், எகிப்திலிருந்து புறப்பட்ட சகல ஆண்களும் வழியில் வனாந்தரத்திலே மாண்டுபோனார்கள். அவர்கள் எல்லோரும் விருத்தசேதனம்பண்ணப்பட்டிருந்தார்கள். ஆனால் அவர்களின் பிள்ளைகள் விருத்தசேதனம் இல்லாதிருந்தார்கள். எனவே யோசுவா அவ்ர்களுக்கு விருத்தசேதனம் பண்ணினான்; ஜனங்களெல்லாரும் விருத்தசேதனம்பண்ணப்பட்டுத் தீர்ந்தபின்பு, அவர்கள் குணமாகுமட்டும் தங்கள் தங்கள் இடத்திலே தங்கியிருந்தார்கள்.

Post a comment

0 Comments