07.சோதோம் கொமெரா பட்டண அழிவும் உப்புக்க‌ல் சிலையும் - BibleUncle Evangelical Media

Wednesday, 2 February 2000

07.சோதோம் கொமெரா பட்டண அழிவும் உப்புக்க‌ல் சிலையும்


ஆபிரகாமின் அண்ணன் மகன் லோத்து சோதோமில் வாழ்ந்துவந்தார் அவ‌ர் நீதிமான்
கட்வுளின் கட்டளை
இரு தேவ தூதர்கள் சோதோம் கொமெராவில் லோத்துவின் வீட்டில் வந்து தங்கினர். லோத்துவிடம்,”பாவங்களின் பேரில் சோதோமும் கொமெராவும் கடவுளால் அழிக்கப்படவிருக்கின்றன. நீ உன் மனைவியோடும் மகள்களோடும் சோதோமை விட்டு உடனே வெளியேறு” என்றனர்.

மறுமகன்களின் மறுப்பு
லோத்து தன் மருமகன்களை தம்மோடு வருமாறு கெஞ்சினார். அவர்கள் லோத்துவின் பேச்சை கேட்காமல் சோதோமில் தங்கினர்.

மீண்டும் எச்சரிக்கை
லோத்துவும் அவர் மனைவியும் மகள்களும் சோதோமை விட்டு வெளியேற மனமின்றி நின்றுகொண்டிருந்தபோது தேவதூதன் அவர்களை கைபிடித்து அழைத்துச்சென்று,”சோதோமிலிருந்து திரும்பிப் பார்க்காமல் ஓடிப்போங்கள், திரும்பிப் பார்த்தால் தண்டிக்கப்படுவீர்கள்”, எனக்கூறி சோதோமிலிருந்து அவர்களை வெளியேற்றினார்.

சோதோம் கொமாராவின் அழிவு
லோத்துவின் குடும்பம் வெளியேறியதும் வானத்திலிருந்து தீப்பிழம்புகள் சோதோம் கொமெரா மீது விழுந்தன. இரு பாவ நகரங்களும் அதன் அருகிருந்த சில நகரங்களும் பற்றி எரிந்தன.
லோத்துவின் மனைவி கடவுளின் ஆணையை மறந்து எரியும் நகரங்களை திரும்பி பார்த்தாள். பார்க்கவும் உப்புக்கல் சிலையாய் மாறினாள்.