05.பாபேல் கோபுரமும் கடவுள் மனிதனை சிதறடித்தலும் - BibleUncle Evangelical Media

Wednesday, 2 February 2000

05.பாபேல் கோபுரமும் கடவுள் மனிதனை சிதறடித்தலும்


மீண்டும்பாவம்
நோவாவிற்குப் பிறகு பல தலைமுறைகள் கடந்தபின், உலகம் மீண்டும் பாவத்தால் நிறைந்தது. மனிதர்கள் கடவுளை மறந்து தங்கள் பெருமைகளில் திளைத்திருந்தனர். அப்படியாக மக்கள் கிழக்கேயிருந்து பயனம் செய்கையில், சிநேயார் பகுதியில் சமபூமியைக்கண்டு, அங்கே குடியிருந்தார்கள் அவ‌ர்க‌ள் ஒரே மொழி பேசுப‌வ்ர்க‌ளாய் இருந்த‌ன‌ர்

பபேல் கோபுரம் க‌ட்டுத‌ல்
அங்கே எல்லோரும் ஒன்றாய்க்கூடி “நாம் நம் பெயர் சொல்ல‌, வானத்தை முட்டுமளவிற்கு கோபுரம் ஒன்றை எழுப்புவோம். நாம் பிரிந்து பூமி எங்கும் பரவிப் போகாமல் அதில் ஒன்றாய் வாழலாம். நம் புகழை அந்தக் கோபுரம் நிலைநாட்டும்” என முடிவெடுத்து பாபேலின் கோபுரத்தை கட்ட ஆரம்பித்தனர்.

கட‌வுள் பலமொழி பேசுபவர்களாக ம‌க்க‌ளை சித‌ற‌டித்தார்
கோபுரம் உயர்ந்தது. மனிதனின் கர்வமும் உயர்ந்தது. கோபுரம் வானை எட்டுமளவுக்கு வளர்வதைக்கண்டு கடவுள், “இவர்கள் ஒன்றாய், ஒரே மொழி பேசுபவர்களாய் இருப்பதினால் இப்படி தங்களால் முடியாததெதுவுமில்லை என நினைக்கிறார்கள். இவர்கள் பல மொழிகள் பேசுபபவர்களாக மாறட்டும்.” என்றார். அப்படியே பூமியின் மக்கள் வெவ்வேறு மொழிகளை பேச ஆரம்பித்தனர். ஒருவர் சொல்வது மற்றவர்க்குப் புரியாமல் போனதால் கூட்டம் கூட்டமாய் பிரிந்து தனித்தனியாய் வாழ ஆரம்பித்தனர்.