நிந்தைகளும் போராட்டங்களும் [3] _ (சென்னை நகரில் புனித தோமா) - BibleUncle Evangelical Media

Saturday, 1 January 2000

நிந்தைகளும் போராட்டங்களும் [3] _ (சென்னை நகரில் புனித தோமா)


சென்னை நகரில் புனித தோமா

புனித தோமா முதன் முதலில் ஊழியத்தை துவங்கும் போது அவர் ஜெபிக்கும் மலை மிகபெரிய மலைக்குன்றாக இருந்தது. புனித தோமாவின் மறைவுக்கு பிறகு பூகம்பம் ஏற்பட்டதினால் அந்த மலையில் ஒரு பகுதி மாதிரம் தற்போது காட்சியளிக்கும் அளவிற்கு ஒதுக்கப்பட்டு நின்றது. முற்றிலும் இயேசுவின் நல்வழிகளை பின்பற்றிய புனித தோமா இயேசுவின் அற்புத அடையாளங்களை கண்டதினால் இவரும் கூட அனேக ஜனங்களை கண்டு மனதுருகினார் என்று சில புதை பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கிபி 50 ம் நூற்றாண்டில் சென்னை நகரில் வசித்த மககள் முற்றிலும் விவசாயம் செய்து வந்தவர்களாயிருந்ததினால் வானம் பொழிய தாமத்தித்தால் புனித தோமாவை அணுகி வேண்டுதல் செய்வார்களாம். புனித தோமா மலை மீது அமர்ந்து கொண்டு அதிகாலையில் ஜெபம் செய்யும் போது தன்னுடைய ஜெபத்தை முடிப்பதற்கு மன்னதாகவே வானம் பொழியும். ஊர் மக்கள் பூரிப்படைவார்கள். இன்றைக்கும் நம் மத்தியில் அனேக பிரசங்கிமார்கள் அதிகாலை ஜெபத்திற்கு முக்கியத்துவம் உண்டு என்று சொல்வதை கவனிக்கிறோம்.

நன்றி: சகோ. சாலோம் மெர்ஸி அவர்கள் http://tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&t=1121#top