Saturday, December 13, 2014

விட்டுவிடாதே, விற்றுவிடாதே! "விசுவாசம் விற்பனைக்கல்ல" என்று சொல்லிவிடு - கவிதைபத்மு தீவில் வனவாசம் என்றாலும்
ரோமாபுரியில் சிறைவாசம் என்றாலும்
மதிப்புமிக்க எங்களது விசுவாசம்
விற்பனைக்கல்ல -என்று
மார்தட்டிச் சொன்ன பரிசுத்தவான்கள்
யாரென்றால்
அப்போஸ்தலனாகிய யோவானும்,
பரிசுத்தப் பவுலடியார்களுமே!


இவர்கள் இருவரும்
விசுவாசத்தை விட்டுவிடவுமில்லை
விற்றுவிடவுமில்லை - மாறாக
எங்கள் விசுவாசம் விற்பனைக்கல்ல என்று
சொல்லிவிட்டார்கள்!


தன் புத்திரன் என்றும், ஏக சுதன் என்றும் பாராமல்
தேவ சத்தம் கேட்டு தன் குமாரனைத் தகனபலியிட
ஒப்புக்கொடுத்த
ஆபிரகாமின் விசுவாசத்தைக் கண்டு


ஈசாக்குக்குப் பதிலாக ஒரு ஆட்டுக்கடாவை
அந்த மலை மேல் ஆயத்தம்பண்ணி
வைத்திருந்தாரே
அந்த தேவன் எத்தனை பெரியவர்!


யேகோவாயீரே என்று
அந்த இடத்திற்குப் பெயர் வைத்து
விசுவாசிக்கிற அனைவருக்கும்
கர்த்தருடைய பர்வதத்திலே
விவரமாகப் பார்த்துக்கொள்ளப்படும்
என்று விளக்கமளித்து
நம்மையயல்லாம் பாட வைத்துவிட்டாரே
உலகமெங்கிலும் உள்ள விசுவாசிகளுக்கெல்லாம்
தகப்பனாகிவிட்டாரே.


அந்த மோரியா மலையில் மலைத்து நிற்காமல்
விசுவாசத்தை விட்டுவிடாமல் மகனுக்காக
விற்றுவிடாமல்,
என் விசுவாசம் விற்பனைக்கல்ல
என்று உறுதிபடச் சொல்லிவிட்டாரே!
தலா நுVற்றுப்பத்து வரு­ங்கள் வாழ்ந்து
இறுதி மூச்சு வரை உறுதி காத்து, உயிர் காத்து
விசுவாசத்தை முன்வைத்து வாழ்ந்து காண்பித்து
முன்மாதிரியைப் பின்வைத்துப் போன
யோசேப்பும் யோசுவாவும்
சரித்திரத்தை மாற்றியமைத்த பரிசுத்த புரு­ர்கள்;
இவர்களது அடிச்சுவடுகள் காஷ்மீர் முதல்
கன்னியாகுமரி வரை போடப்பட்ட
அகல ரயில் பாதை போல, வேதாகமத்தின்
பக்கங்களில் நீண்டுகொண்டே செல்லக்கூடியவை!


சோதனைகளையும் வேதனைகளையும் தாண்டி
வெற்றிக்கொடி பிடித்து வீர நடை நடந்த இவர்கள்
தங்கள் விலையேறப்பெற்ற விசுவாசத்தை
விட்டுவிடவுமில்லை, வந்த விலைக்கு
விற்றுவிடவுமில்லை - மாறாக
எங்கள் விசுவாசம் விற்பனைக்கல்ல என்று
சொல்லிவிட்டார்களே!


ஆவியினாலே ஆரம்பம்பண்ணின
எத்தனையோ பேர்
விசுவாசத்தை விட்டுவிட்டு, விற்றுவிட்டு
மாம்சத்தினாலே முடிவுபெறப்போகிறார்களே!
இது எத்தனை புத்தியீனம்? (கலா.3:3)


எரிகோவுக்குச் சமீபமாய் இயேசுவானவர் வந்தபோது
விழிகளிலிருந்தும் பார்வையில்லாத ஒருவன்
வழியருகே உட்கார்ந்து பிச்சை
கேட்டுக்கொண்டிருந்தான்  
ஏமாற்றிப் பிழைப்பதைவிட
பிச்சையயடுத்துப்பிழைப்பதில்
பிழை இல்லை என்பது
அவனது அபிப்பிராயம். ஆனால்
அன்றையத் தினம்
தன் காரியம் மாறுதலாய் முடியும் என்றோ
பிச்சைப் பாத்திரம் பறிமுதல் செய்யப்பட்டு  
இரட்சிப்பின் பாத்திரம்
இலவசமாய் வழங்கப்படும் என்றோ  
அவன் கனவுகூட கண்டிருக்க மாட்டான்.
வீதியில் உண்டான ஜன சப்தம் கேட்டு
இதென்ன என்று விசாரித்தான்,
அந்த அற்பமான  கேள்வி அவனது வாழ்க்கையைப்
புரட்டிப் போட்டுப் புரட்சி செய்துவிட்டது! இது ஓர்
Million-dollar question என்றுகூடச்
சொல்லலாம்.


இதென்ன   என்ற கேள்வியை அவன் கேட்காமல்
அய்யா அம்மா என்று மட்டும் அடம்பிடித்து,
நடைப்பிணங்களைப் பார்த்துப் பைசாக்களை மட்டும்
கேட்டிருந்தால்
காலமெல்லாம் கபோதியாகவே வாழ்ந்திருப்பான்.
பிச்சைப் பாத்திரமே பிரதானமான பாத்திரமாக
இருந்திருக்கும்.


இதென்ன என்ற அவனது கேள்விக்கு
நசரேயனாகிய இயேசு போகிறார்
என்று பதில் கிடைத்தது.
பதில் சொன்ன புண்ணியவாளன் யாரோ?
சிலர் அதையும் மறைத்து,
யார் போகிறார்கள் என்று தெரியாது
யார் போனால் உனக்கென்ன?
நீயே ஒரு கபோதி என்று
போதிக்கவும் தொடங்கிவிடுவார்கள்.


நல்ல வேளை
ஒருவன் உண்மையைச் சொன்னான்.


""நசரேயனாகிய இயேசுவா?''
கிடைத்த பதிலைப் பிடித்துகொண்டு சொற்போர் நடத்தி
முன் நடப்போரைப் பின்னுக்குத் தள்ளி
தன்னைவிட்டுக் கடந்துவிட்ட
கர்த்தரின் காதில் விழுந்துவிட்டான்.


மனிதர்களின் காலில் விழுவதைவிட , தன் சத்தம்
கர்த்தரின் காதில் விழுவதே மேல்
என்பதைத் தெரிந்துகொண்ட மகான் அவன்.
பாவத்தை மன்னிக்க அதிகாரமில்லாதவர்களின்
காலில் விழுவதைவிட,
பாவத்தை மன்னிக்க அதிகாரமுள்ளவரின் காதில்
விழுவதே மேல் என்று எண்ணிவிட்டான்!


முன் நடப்பாரின் அதட்டலை அல்லத்தட்டிவிட்ட அந்த
மாற்றுத்திறனாளியை
இயேசு அல்லத்தட்டவில்லை,
அலட்சியப்படுத்தவில்லை, அதட்டவில்லை.
அல்லத்தட்டுகிறவர்களும்,
அலட்சியப்படுத்துகிறவர்களும், அதட்டுகிறவர்களும்
கண்தெரிந்த குருடர்களே என்பது அந்தக் குருடனின்
புதிய கண்டுபிடிப்பு - காரணம்
குருடருக்குப் பார்வையைப் பிரசித்தப்படுத்தவும்
நொறுங்குண்டவர்களை
விடுதலையாக்கவும் அபிஷேகம் பண்ணப்பட்டு
அனுப்பப்பட்ட ஆண்டவரை
நெருங்கவிடாமல் தடைசெய்கிறார்களே!
நொந்து நுVலாகி நொறுங்கிப்போன
என் உள்ளத்தை நொறுக்குகிறார்களே!
பத்துப் பைசா போட முடியாத இவர்கள்
தடையுத்தரவைப் போடுகிறார்களே!
பார்வையைச் சொந்தமாக்கி அதையே
சொத்தாக்கிக்கொள்ள முயற்சிக்கும்
என்னைப் போன்ற
மாற்றுத்திறனாளியை மட்டுப்படுத்த
நினைக்கிறார்களே! இந்த
எரிகோவில் போடப்பட்ட
மனிதத் தடை உத்தரவை நான் மீறுவேன்,
தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும் என்று
கூப்பிடுவேன் - என்று
திடீரென்று தெருவில் ஒரு வாகனம் தீப்பிடித்துவிட்டால்
அதன் உரிமையாளர் தீவிரிப்பாரே அதுபோல
தீவிரித்துக் கூப்பிட்டான். சொல்லப்போனால்
அந்த எரிகோ வீதியில் நெருப்புதான்
பற்றிக்கொண்டது.


முன்னொரு நாளில் சாரிபாத் ஊரில் சாப்பிட்டுச்
சாகப்போன விதவையை
கூப்பிட்டுக் குறை தீர்த்த தேவனை
அறிந்திருந்தானோ என்னவோ?
ஏங்கித் தவித்தவன் ஓங்கிக் கூப்பிட்டு  
இயேசுவின் அழைப்பைப் பெற்று
புதிய பார்வையைப் பரிசாகப் பெற்றுக்கொண்டான்.
நடுவழியிலேயே அவனுக்கு
நல்வாழ்வைப் பரிசளித்து
ஒரு ஜோடிக் கண்களைப் புதிதாக ஈந்தாரே, எத்தனை
பெரிய அற்புதர்! அற்புதம்!


அந்தப் புதிய கண்கள் முதன் முதலாக, தடை
செய்தவர்களை அல்ல
புண்ணியரைப் பார்த்து பூரித்தன;
இயேசு அந்த எரிகோ வீதியிலேயே பயணத்தைச்
சற்று நேரம் ஒத்திவைத்து
வீதியிலே ஓர் விழா எடுத்து,
பாராட்டிப் பாடம் நடத்தினார்
உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது
என்று சொல்லி
தன்னை மறைத்துக்கொண்டு
விசுவாசித்தவனை வெளிப்படுத்திக் காண்பித்தாரே!

-பாஸ்டர் J இஸ்ரேல் வித்ய பிரகாஷ்

Wednesday, December 10, 2014

எண்ணிக்கையும்! எண்ணங்களும்! கவிதைபரலோக சிந்தனைகளைப் பாதியில் நிறுத்திவிட்டு
பூலோக சிந்தனைகளை உரம்போட்டு வளர்த்துவிட்டு
பூமியதிர்ச்சி வரும்போதுமட்டும்
வானவரைப் பார்க்க வெட்டவெளிக்கு விரைந்தோடும்
கால்களின் எண்ணிக்கை பெருத்துவிட்டது- அவர்களின்
எண்ணங்களும் கறுத்துவிட்டது! - ரோமர் 1:21


சிந்திக்கேயாளின் சிந்தை மாறிவிட்டது - ஏனோ
எயோதியாளின் சிந்தையும் மாற்றம் கண்டுவிட்டது
பரிசுத்தப் பவுலடியாரின் கண்கள் இதைக் கண்டுவிட்டது
பரிசுத்தவானின் செவிகள் இதைக் கேட்டுவிட்டது - இதனால்
கர்த்தருக்குள் ஒரே சிந்தையாயிருக்கவேண்டும் என்ற
கட்டளையும் பிறந்துவிட்டது! - பிலிப்பியர் 4:1,2


சிந்தையைச் சில காலம் அடகு வைத்துவிட்டு
தேவனுடைய மந்தையை மறந்துவிட்டு - வாழும்
மக்களின் எண்ணிக்கை பெருகிவிட்டது
சிறைச்சாலைக்குள்ளே பவுலுக்கும் சீலாவுக்கும் இருந்த சிந்தை - அப். 16:25
சபைக்குள்ளே இருக்கிறவர்களிடம் இல்லையே என்ற கவலை
பரிசுத்தவான்களுக்குப் பெருகிவிட்டது  

                                                
பெற்றுக்கொள்ளும் சிந்தை பெருகிவிட்டது
கற்றுக்கொள்ளும் சிந்தை குறைந்துவிட்டது - இதனால்
வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களின்   - மத்தேயு 11:28
எண்ணிக்கை பெருகிவிட்டது
தலைகளை எண்ணும் உலகம் மனித வருத்தங்களை
எண்ணுவதற்குத் தவறிவிட்டது


என் நுகத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் - மத்தேயு 11:29
என்றவரின் முகத்தைப் பார்க்க விரும்பாத மக்களின்
எண்ணிக்கை பெருகிவிட்டது -இதனால்
இளைப்பாறுதலைப் பெறுவதற்குப் பதிலாக - ஆத்துமாக்களில்
இளைப்பைப் பெற்றுக்கொள்கிறவர்களின் எண்ணிக்கை பெருகிவிட்டது! - சங்.106:15


இத்தனைக்கும் நடுவே
இறை மக்கள்
இறை வார்த்தையை
இரையைப் பார்க்கிலும் மேலானதாக உண்டு
சிந்தனையில் பதியம் போட்டுக்கொண்டு
பரிசுத்த வேதத்தைக் கையில் எடுத்துக்கொண்டு
பரிசுத்த தேவனை நோக்கி ஜெபித்துக்கொண்டு
பாரஞ்சுமந்து தவித்தாலும் போர்வையைக் (ஜீவனை)
களைந்துபோட வேண்டும் என்று விரும்பாமல் -2 கொரி.5:4


எலியாவைப் போல
போதும் கர்த்தாவே என்று புலம்பாமல்
இயேசுவைப் போல
என் சித்தமல்ல உம் சித்தம் தேவா
உம் சித்தம் செய்ய இதோ என்னை அப்படியே தத்தம் செய்கிறேன்
ஏற்றுக்கொள்ளும் - என்று சொல்லி
மரணமானது ஜீவனாலே விழுங்கப்படுவதற்காக
போர்வை தரித்தவர்களாயிருக்க விரும்புகிற கூட்டம் பெருத்துவிட்டது
 

தரிசித்து நடக்க மறுத்து - சாத்ராக் மேஷாக், ஆபேத்நேகோ போல
விசுவாசித்து நடக்கிற பரிசுத்த கால்களின் எண்ணிக்கை பெருத்துவிட்டது - அவர்களின்
எண்ணங்களில் மகிமையான சுவிசே­த்தின் வெளிச்சம் பெருகிவிட்டது
                                                                                                                                     - அல்லேலூயா

Thursday, November 20, 2014

அந்த இளைஞனைப் போலாகிவிடு (கவிதை) - பாஸ்டர் J ‍இஸ்ரேல் வித்ய பிரகாஷ்இனிய இளைஞனே
துளிர்விடும் தளிரே
உனக்குள் இருக்கும்
உள்ளாற்றலை உற்றுப்பார்க்க
ஜெபத்தோட்டத்திற்குள்ளே
உட்பிரவேசித்திருக்கிற ஒலிவமரக்கன்றே
உன்னை நீ அறிந்தால்
உன் வழியை வாய்க்கப்பண்ணி
யோசுவாவைப் போலாகிவிடலாம்


இந்திய மண்ணில் முளைத்த இளைஞனே
ஆதியாகமத்திற்குள் நுழைந்து
37-ல் ஓர் அழகிய 17-ஐ இனம் கண்டுவிடு
அவனைப் போலாகிவிடு
போதையில் சிக்கி பாதை மாறி
முப்பதில் முடங்கிவிடும் இக்கால இளைய
சமுதாயத்தில்
முப்பதில் அந்த இளைஞனைப் போல முழுமை
பெற்றுவிடு
சிறையிலிருந்தாலும் சிங்காசனத்தில் ஏறிவிடலாம்


துணிவுடன் தூய மனதுடன்
துன்மார்க்கத்தை எறிந்துவிடு
உண்மையுடன் நல்மனச்சாட்சியுடன்
தீமோத்தேயுவைப் போல உத்தமக்
கூட்டாளியாகிவிடு
எங்கிருந்தாலும் அங்கிருக்கும் பவுலைப்
போன்றோருக்கு
உடன் பங்காளியாகிவிடலாம்


வில்லுகளையும் அழகிய செல்-லுகளையும்
வசைச் சொல்லுகளையும்
அம்புகளையும் வீண் வம்புகளையும்
அசட்டை செய்துவிடு
அந்நிய நாடானாலும் அந்த இளைஞனைப் போல
கண்ணியத்தைக் காட்டிவிடு


சோதனைகள் சிலரைப் பதுக்கலாம்
சிலரைச் செதுக்கலாம்
சோதனைகள் கூட்டணி அமைத்து அந்த
இளைஞனை செதுக்கியது
உன்னையும் செதுக்க ஒப்புக்கொடுத்தால்
உரிய காலத்தில் உயர்வடையலாம்

நீரூற்றண்டையிலே நிற்பவனே
அந்த இளைஞனைப்போல
கனிதரும் செடியாகிவிடு
சுவரென்றும் பாராமல் கொடிகளைப் படரவிடு
வில்வீரர் மனமடிவாக்கினாலும் கவலையைவிடு
விசுவாச வீரனாய் செடியைக் கொடியாக்கி
பகைவர் என்றும் பாராமல் படரவிடு


உனக்குள் உறைந்துகிடக்கும்
உள்ளாற்றலை உசுப்பிவிடு
யாக்கோபின் வல்லவரால்
உன் ஆற்றல் கூடங்குளம் அனுஉலையாகட்டும்
உலகத்தை ஒளிமயமாக்கட்டும்

நான் ஏன் பிறந்தேன் என்றோ
நான் எதற்காக இங்கு வந்தேன் என்றோ பேசாதே


உன் சிரசை சிங்காரமாக்க
உண்மையுள்ள உன் உச்சந்தலையை
அலங்கரிக்க
உனக்குள்ளிருக்கும் உளளாற்றலை
பேராற்றலாக்க
இதோ ஜெபத்தோட்டத்திற்குள்ளே
கொண்டுவந்திருக்கிறேன்
இங்கே சர்வவல்லவரோடு பழகி
சமாதானமாகிவிடு
விசுவாசத்தில் வல்லவனாகிவிடு


வாலிபத்தின் வாசலில் நிற்பவனே
உன்னை வாழ்த்துகிறேன்.


‍‍- பாஸ்டர் J ‍இஸ்ரேல் வித்ய பிரகாஷ்... மதுரை

Wednesday, November 12, 2014

ஜீவ தண்ணீர் மாத இதழ் (PDF) நவம்பர் 2014 இலவச தரவிறக்கம்

கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே, நமது பைபிள் அங்கிள் வலைதளத்தின் வாயிலாக போதகர் இஸ்ரேல் வித்திய பிரகாஷ் அவர்களுடைய ஜீவ தண்ணீர் மாத இதழை வெளியிடுவதில் கிறிஸ்துவுக்குள் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம், இந்த இதழை மின் இதழலாக நேரடியாக இணையத்திலும் படிக்கலாம், அல்லது தரவிறக்கம் செய்து சேமித்தும் படிக்கலாம், அல்லது உங்களுக்கு விருப்பமானால் நேரடி சந்தாதாரராகி உங்கள் இல்லத்துக்கே மாத மாதம் வரவழைத்துப் படிக்கலாம்,  இனி கர்த்தருக்கு சித்தமானால் மாதா மாதம் இப் பத்திரிக்கை நம்முடைய தளத்தில் வெளிவரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி

கீழே உள்ள படத்தைக் கிளிக் செய்து படித்துப் பயனடையுங்கள்
https://docs.google.com/file/d/0B3t-wpYWZgotMm90bG4zTTYyTHM/edit

Tuesday, September 16, 2014

ஜீவ தண்ணீர் மாத இதழ் (PDF) செப்டம்பர் 2014 இலவச தரவிறக்கம்

கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே, நமது பைபிள் அங்கிள் வலைதளத்தின் வாயிலாக போதகர் இஸ்ரேல் வித்திய பிரகாஷ் அவர்களுடைய ஜீவ தண்ணீர் மாத இதழை வெளியிடுவதில் கிறிஸ்துவுக்குள் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம், இந்த இதழை மின் இதழலாக நேரடியாக இணையத்திலும் படிக்கலாம், அல்லது தரவிறக்கம் செய்து சேமித்தும் படிக்கலாம், அல்லது உங்களுக்கு விருப்பமானால் நேரடி சந்தாதாரராகி உங்கள் இல்லத்துக்கே மாத மாதம் வரவழைத்துப் படிக்கலாம்,  இனி கர்த்தருக்கு சித்தமானால் மாதா மாதம் இப் பத்திரிக்கை நம்முடைய தளத்தில் வெளிவரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி

கீழே உள்ள படத்தைக் கிளிக் செய்து படித்துப் பயனடையுங்கள்
https://docs.google.com/file/d/0B3t-wpYWZgotRlJIRWx6bzNqajQ

Saturday, September 6, 2014

ஜீவ தண்ணீர் மாத இதழ் (PDF) ஆகஸ்ட் 2014 இலவச தரவிறக்கம்

கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே, நமது பைபிள் அங்கிள் வலைதளத்தின் வாயிலாக போதகர் இஸ்ரேல் வித்திய பிரகாஷ் அவர்களுடைய ஜீவ தண்ணீர் மாத இதழை வெளியிடுவதில் கிறிஸ்துவுக்குள் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம், இந்த இதழை மின் இதழலாக நேரடியாக இணையத்திலும் படிக்கலாம், அல்லது தரவிறக்கம் செய்து சேமித்தும் படிக்கலாம், அல்லது உங்களுக்கு விருப்பமானால் நேரடி சந்தாதாரராகி உங்கள் இல்லத்துக்கே மாத மாதம் வரவழைத்துப் படிக்கலாம், இந்த ஆகஸ்ட் மாத இதழை தமதமாக வெளியிடுவதற்கு வருந்துகிறோம், இனி கர்த்தருக்கு சித்தமானால் மாதா மாதம் இப் பத்திரிக்கை நம்முடைய தளத்தில் வெளிவரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி

கீழே உள்ள படத்தைக் கிளிக் செய்து படித்துப் பயனடையுங்கள்
https://48abb8c6172b2758a673cf342538783e757191cc.googledrive.com/host/0B2Znp14b4TcdUml1ZERXREdGelU/August%202014%20PDF.pdf

Sunday, August 3, 2014

இஸ்ரவேலின் தேவனைக் குறித்து ஹமாஸ் தீவிரவாதிகளின் வாக்கு மூலம்

இஸ்ரேல் தேசம் - உலக வரைப்படத்தில் சிறிய தேசமாய் இருந்தாலும் இன்று உலகமே வியந்து பார்க்கும் ஓர் பெரிய நாடாக விளங்கி கொண்டிருக்கிறது. இந்த தேசம் 19ம் நூற்றாண்டு வரை உலக வரைப்படத்தில் இல்லை. ஆனால் பரிசுத்த வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ள பல தீர்க்கதரிசன வசனங்கள் நிறைவேறி கொண்டிருக்கிரன்றன.. அது இந்த இஸ்ரேல் தேசத்தை பற்றியும் தான்..

70ம் ஆண்டில் (கிறிஸ்துவுக்கு பின்) யூதர்கள்/இஸ்ரவேலர்கள் இந்த 20ம் நூற்றாண்டில் தான் மீண்டும் தங்கள் தேசத்தை சொந்தமாகிகொள்ள முடிந்தது.

1. சிதறடிக்கப்பட்ட யூதர்கள் மீண்டும் தங்கள் தேசத்தை அடைவர் (ஏசாயா 11:11,12)

2. இஸ்ரேல் தேசம் மீண்டும் உயிர்பெறும் (ஏசாயா 66:7,8 மற்றும் எசேக்கியல் 37: 21-22). இந்த வசனம் நிறைவேறிய நாள் மே 14, 1948

3. யூதர்கள் மீண்டும் எருசலேம் நகரத்தை தனதாக்கி கொள்வர் (சகரியா 8:4-8). இந்த வசனம் நிறைவேறிய நாள் ஜூன் 7, 1947

4. பாழாக்கப்பட்ட இஸ்ரேல் தேசத்தின் மண் மீண்டும் விளைச்சலை கொடுக்கும் (எசேக்கியேல் 36:34-35). இந்த வசனம் பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் எழுதப்பட்டது. ஆனால் சொன்னதை மாற்றாமல் நிறைவேறி உலக கவனத்தை தன பக்கம் ஈர்த்துள்ளது.

சமீபத்தில் நடைபெற்று கொண்டிருக்கிற போர் பல நாடுகளை கவலை அடைய செய்துள்ளது. ஆனால் இதை பலரும் முக்கியமாக ஹமாஸ் இயக்கம் பொய்யான முகத்தை காட்டி தப்பிக்க முயல்கிறது. இதற்கு ஆதரவாக சமீபத்தில் இந்தியாவில் / தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ள பல போராட்டங்கள் மக்களின் மனதில் இஸ்ரேல் தேசத்தை பற்றி தவறான கருத்துக்களை பதிய உதவுகிறது.

இந்த போருக்கு அடிப்படை காரணம்? 
ஹமாஸ் என்ற தீவிரவாத இயக்கம்

இந்த போருக்கு காரணம்? 
இஸ்ரேல் தேசத்தை சேர்ந்த மூன்று பள்ளி மாணவர்களை ஹமாஸ் இயக்க தீவிரவாதிகள் குழுவை சேர்ந்தவர்கள் கடத்தி கழுத்தை அறுத்து கொன்றனர். இவர்களை கொன்றவனின் தாய் தான் பெருமைப்படுவதாக பேட்டி அளித்து பாலஸ்தீனர்கள் எந்த அளவிற்கு இஸ்ரேல் தேசத்தை வெறுக்கிறார்கள் என்பதை நிரூபித்தார். http://mondoweiss.net/2014/06/israeli-netanyahu-responsible.html . இந்த படுகொலையை அடுத்து இஸ்ரேல் அதிபர் எச்சரிக்கை விடுத்தார். அதற்குள் ஆத்திரம் அடைந்த சில யூதர்கள் ஓர் பாலஸ்தீன வாலிபனை பிடித்து அடித்து கொன்றனர். http://timesofindia.indiatimes.com/world/middle-east/Israel-charges-3-Jews-over-Palestinian-teen-murder/articleshow/38557983.cms

இதில் நீங்கள் முக்கியமாக பார்க்கவேண்டியது என்னவென்றால் இஸ்ரேல் வாலிபர்களை கொன்ற பாலஸ்தீனர்களை பாலஸ்தீன அரசு கண்டிக்கவோ, கைது செய்யவோ இல்லை. ஆனால் ஒரு பாலஸ்தீன வாலிபனை கொன்றதற்காக இஸ்ரேல் அரசு மூன்று பேரை கைது செய்து நீதியை நிலைநாட்டியது.

பாலஸ்தீன வாலிபன் இறுதி சடங்கில் கலந்து கொண்ட இஸ்லாமியர்கள் ஹமாஸ் இயக்க துணையோடு வெறியூட்டப்பட்டவர்களாய் இஸ்ரேலை குறிவைத்து தாக்கினர். இஸ்ரேல் அவர்களை அடக்கியது. இதில் ஆத்திரம் அடைந்த ஹமாஸ் இயக்கம் குண்டு வீசியது. பதிலுக்கு இஸ்ரேல் ராணுவமும் குண்டு வீசியது.. http://rt.com/news/170500-israel-palestinian-clashes-funeral/

இது தான் இப்போது நடைபெற்று கொண்டிருக்கும் போருக்கு காரணம். ஹமாஸ் தீவிரவாத இயக்கத்தின் தூண்டுதலால் சாதாரண மக்கள் கொலை செய்யப்படுகின்றனர். இதனை அறிந்த பல இஸ்லாமிய நாடுகளும் ஹமாஸ் இயக்கத்தை கண்டித்து போரை முடிவுக்கு கொண்டு வர வற்புறுத்துகின்றனர்.

முக்கியமாக கத்தார், எகித்திய நாடுகள் இதனை முன்னின்று ஹமாஸ் இயக்கம் நிச்சயம் அழியும் என்று எதிர்பார்க்கின்றனர். அவர்களை பொறுத்தவரை ஹமாஸ் என்ற இயக்கம் தான் பாலஸ்தீனர்கள் அழிய முக்கியமான காரணம். http://www.gatestoneinstitute.org/4401/egypt-israel-hamas அரபியர்களும் ஹமாஸ் இயக்கம் அழியும் என்று எதிர்பார்த்து காத்துகொண்டிருக்கின்றனர்.
http://www.jpost.com/Opinion/Columnists/Fed-up-with-Hamas-363283
http://www.jewishpress.com/news/breaking-news/arab-world-hopes-israel-continues-operation-and-destroys-hamas/2014/07/13/
http://www.france24.com/en/20140720-egyptian-media-applauds-israel-gaza-offensive/

இப்படி ஹமாஸ் இயக்கத்தை இஸ்லாமிய நாடுகள் எதிர்க்க காரணம் என்ன?
ஹமாஸ் இயக்கம் ஓர் ராணுவம் அல்ல. தீவிரவாத இயக்கம். இதற்கு ஒரே குறிக்கோள் தான். எப்படியாவது இஸ்ரேல் தேசத்தை அழிக்க வேண்டும் என்பது தான். ஆனால் பாலஸ்தீன மக்கள் அமைதியை விரும்பும் சாதாரண மக்கள். இங்கு பண, தொழில் வளர்சிகள் ஹமாஸ் இயக்கத்தால் முடங்கி போய் உள்ளன.

இந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் இந்த போரில் மக்களை கேடயமாக பயன்படுத்துகின்றனர். இஸ்ரேல் தேசம் தன் நாட்டு மக்களை காத்துக்கொள்ள போரில் குதித்துள்ளது. ஆனால் ஹமாஸ் இயக்கம் மக்களை கேடயமாக பயன்படுத்தி சாதாரண மக்களை பலியாக்கி வருகிறது.

இஸ்ரேல் மருத்துவமனை, பள்ளிகூடங்கள், மக்கள் வசிக்கும் பகுதியில் குண்டு வீசுகிறது என்று ஹமாஸ் இயக்கம் தகவலை அள்ளித்தருகிறது. உண்மை தான். ஆனால் இங்கு தான் பதுங்கு குழிகளை அமைத்து ஹமாஸ் குண்டுகளை வீசி வருகிறது. இதனால் இஸ்ரேல் அரசுக்கு வழிதெரியவில்லை. குண்டுவீச்சில் பல தீவிரவாதிகள் கொள்ளப்படுவதில் இருந்தே இந்த உண்மையை அறிந்து கொள்ளலாம். ஆனால் இவர்களையும் அப்பாவி மக்கள் என்று ஹமாஸ் இயக்கம் பொய்யான தகவலை பரப்பி வருகிறது.

இதில் உலக புகழ் பெற்ற BBC தொலைகாட்சி நிறுவனமும் அடங்கும். சமீபத்தில் இந்த நிறுவனம் மன்னிப்பு கோரி உள்ளது. http://www.washingtonpost.com/news/the-intersect/wp/2014/07/11/what-was-fake-on-the-internet-this-week-celebrity-impressions-endangered-redheads-and-photos-from-gaza/

பாலஸ்தீனர்கள் இஸ்ரேலியர்களை முழு மனதுடன் எதிர்க்கிறார்கள் என்றால் ஏன் 50,000 க்கும் மேற்ப்பட்ட பாலஸ்தீனர்கள் வெளியேற வேண்டும்? ஹமாஸ் இயக்கத்துடன் நின்று சண்டை போடலாமே? பாலஸ்தீனர்கள் அமைதியை விரும்புகிறார்கள். ஆனால் ஹமாஸ் இயக்கமோ போரை விரும்புகிறார்கள். அதனால் தான் இஸ்ரேல் போர் நிறுத்தத்தை அறிவித்த பின்னரும் ஹமாஸ் குண்டு வீசி தாக்கி வருகிறது.

இந்த சந்தையில் 500 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் கூறி வந்தாலும் பெயர் விபரத்தை இன்னமும் வெளியிடவில்லை. இந்த உண்மையை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். இஸ்ரேல் தரப்பிலும் பல சேதங்கள் உண்டு. ஆனால் யாரும் அதை பெரிதுபடுத்துவதில்லை. பொய்கள் தான் இன்று பெரிதாய் தெரிகின்றன..

இஸ்ரேல் நாடு தன் நாட்டு மக்களை பாதுகாத்துக்கொள்ள உரிமை இருக்கிறது. கார்கில் போரில் எந்த நாட்டில் பேச்சையும் நாம் கேட்கவில்லை. இந்தியாவிற்கு தெரியும், எப்படி இந்தியாவை பாதுகாக்க வேண்டும் என்று. அதை போல இன்னொரு நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் நாம் மூக்கை நுழைப்பது முடியாத காரியம்.

அந்தந்த நாடு முடிவெடுத்து தன் மக்களை காக்க வேண்டும். இதில் இஸ்ரேல் தன் மக்களை காக்க முடிவெடுத்ததில் எந்த தவறும் இல்லை. ஹமாஸ் இயக்கத்திற்கு தைரியம் இருந்தால் அவர்கள் மக்கள் மத்தியில் இருந்து வெளியே வரட்டும். இஸ்ரேலில் இஸ்ரேல் ராணுவத்தினர் மட்டும் தான் தாக்கப்பட்டனர். ஆனால் பாலஸ்தீனத்தில் மக்களும் போரில் இறையாகுகின்றனர். காரணம் ஹமாஸ் மக்கள் மத்தியில் மறைந்து நின்று ஏவுகணைகளை வீசுகிறது. இஸ்ரேல் மீண்டும் தாகும் பொது தீவிரவாதிகளோடு மக்களும் மறிக்கின்றனர்.
http://www.smh.com.au/comment/hamas-rocket-attacks-provoked-israels-ground-offensive-into-gaza-strip-20140720-zuysx.html

இந்த உண்மையை நான் இஸ்லாமியர்களுக்கு எதிராக எழுதவில்லை. நான் பாலஸ்தீனர்களுக்கு எதிரானவன் அல்ல. ஹமாஸ் என்ற ஓர் தீவிரவாத இயக்கத்தின் ரத்த வாடைக்கு பலியாகும் அப்பாவி மக்களை பற்றி இதில் எழுதியுள்ளேன். மீண்டும் தொடரும்.

இந்த பட தலைப்பில் ஓர் ஹமாஸ் தீவிரவாதி கொடுத்த பேட்டியை தான் பார்க்கிறீர்கள். அவர்களின் தெய்வம் (யெஹோவா) நாங்கள் வீசும் ராக்கட்டுகளை திசை மாற செய்கிறார்" என்று அங்கலாய்க்கும் செய்தியை தான் படிக்கிறீர்கள். நம் தேவன் பெரியவர். அவர் ஒரு போதும் கைவிடார். ஒரு நாளும் விலகிடார். ஆமென்..

கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ
ஊழியங்கள்
நன்றி:www.facebook.com/DiedForChristJesus

இந்தக் கானொளியைப் பாருங்கள் காசா பகுதியில் ஹமாஸ் தீவிரவாதிகள் குழந்தைகளை எப்படி மனிதக் கேடயங்களாக பயன்படுத்தி தாக்குதல்களை நடத்துகிறார்கள் என்று புரியும், ஒருவேளை இஸ்ரேல் இரானுவம் இந்த குண்டுவீச்சுக்கு எதிர்த் தாக்குதல் நடத்துமானால் இங்கிருக்கும் குழந்தைககளும் சேர்த்து கொள்ளப்படுவார்கள்..

இப்படித்தான் ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் இராணுவம் அப்பாவி மக்களையும் பெண்களையும் குழந்தைகளையும் கொல்லுவதாக உலகம் முழுவதும் பொய்பிரச்சாரத்தில் ஈடுபட்டு நம்பவைக்கிறார்கள்

இஸ்ரவேலின் சமாதாணத்திற்காக வேண்டிக்கொள்ளுங்கள் ( சங்கீதம் 122:6)

Wednesday, April 23, 2014

ஜிம் எலியட் (1927-1956) ஈக்வேடாரில் விழுந்த கோதுமை மணி

சில நாட்களுக்கு முன் நமது பைபிள் அங்கிள் தள வாசகர் நெல்சன் ஜார்ஜ் அவர்கள் ஜிம் எலியட் மிஷனரியைப் பற்றி அறியத் தரும்படி கேட்டிருந்தார்.. எனக்கும் மிகவும் பிடித்த மிஷனரிகளில் ஒருவர் ஜிம் எலியட் அதனால் அவரக் குறித்து எழுதுவது நன்மையாகக் கண்டது. இனி அவரைக்குறித்து பார்ப்போம்...

ஜிம் எலியட் அக்டோபர் 8 1927  - ‍ ஜனவரி 8 1956
அமெரிக்காவில் ஒரு புகழ்பெற்ற கல்லூரியின்(Benson Polytechnic High School) மாணவனாக இருந்த ஜிம் எலியட் மாணவத் தலைவராகவும், சிறந்த மல்யுத்த‌ வீரராகவும், பேச்சாளராகவும் திகழ்ந்த ஜிம் எலியட்டின் வாழ்க்கையில், அக்டோபர் 28, 1949 அன்று திருப்புமுனை ஏற்பட்டது ஆம் அன்றுதான்  "தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்" (லூக்கா9:24.) என்ற வேத வசனம் தன்னோடு கூட பேசுவதை அறிந்துக்கொண்டார். கல்லூரி ஜெபக்குழுவில் ஈக்வேடார் குறித்தும் அந்த மக்களுக்கு இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி அவர்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் குறித்தும் கேள்விப்பட்ட போது தன்னுடைய எல்லா ஆசைகள் கனவுகளையும் விட்டொழித்து  ஈக்குவேடார் நாட்டுக்கு மிஷனரியாகப் போக தீர்மானித்தார்..

பெற்றொர் நண்பர்கள் எல்லாம் ஆண்டவருக்கு ஊழியம் செய்யும் முடிவு நல்லது தான் ஆனால் ஏன் வெளிநாட்டுக்குப் போய் செய்ய வேண்டும்? அமெரிக்காவிலேயே செய்யலாமே? என்று பாசப் போராட்டம் நடத்தினார்கள், அமெரிக்காவில் கிறிஸ்தவர்கள் அதிகம், வேதமும் எளிதாக கிடைக்கிறது அவர்களுக்கு சுவிஷேசம் சொல்ல வேண்டுவதில்லை, அவர்களது வீடுகளில் உள்ள வேதாகமங்களின் மேல் படிந்திருக்கும் தூசியே கடைசி நாட்களில் அவர்களுக்கெதிராக சாட்சிகொடுக்கும்.. நான் கிறிஸ்துவைப் பற்றி கேள்விப்படாத மக்களிடயே சுவிஷேசம் சொல்லவே விரும்புகிறேன் என்று சொல்லி ஈக்குவேடார் செல்ல தீர்மானித்தார்.

அதன்படி பிப்ரவரி 21, 1952 ஆம் ஆண்டு மிஷனரியாக தன்னுடைய கல்லூரி தோழன் பீட்டர் ஃபிளமிங் (Peter Fleming) ‍ என்பவருடன் ஈக்வேடார் நாட்டுக்கு சென்றார், அங்கு நேட் செயின்ட் (Nate Saint) எட் மெக்கல்லி (Ed McCully) மற்றும் ரோஜர் யொடரையன் (Roger Youderian).. ஆகிய உடன் ஊழியர்கள் ஜிம் எலியட்டுக்கு கிடைத்தார்கள் இவர்கள் ஈக்வேடாரில் கீச்சுவா இந்தியர்கள்(Quechua Indians) மத்தியில் ஊழியம் அனுப்பப் பட்டிருந்தனர்,

திருமணமும் குழந்தையும்,
தனக்கிருக்கும் திறமையையும், படிப்பையும் கிறிஸ்துவின் பொருட்டு நஷ்டமென்று எண்ணி மிஷனரியாக வசதிகளற்ற ஈக்குவேடார் காடுகளுக்குச் சென்ற ஜிம் எலியட் 1953 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் நாளில் செவிலியராகப் பணி புரிந்த எலிசபெத் ஹோவர்ட் என்பவரை மணமுடித்தார். இந்தத் தம்பதிகளுக்கு வாலெரியே (Valerie) என்ற பெண் குழந்தை பிப்ரவரி 27, 1955 ஆம் ஆண்டு பிறந்தது, இவர்கள் ஈக்குவேடாரின் கிட்டோ (Quito) வில் தங்கியிருந்து தேவனுக்கென்று ஊழியம் செய்து வந்தார்கள்

ஆக்கா(Auca) இந்தியர்கள்
அங்கு அடிப்படை வசதிகள் எதுவுமின்றி தங்களுக்கு இருந்த சொற்ப வசதிகளை முழு மனதோடு ஏற்றுக் கொண்டு, மந்திரம் மூட நம்பிக்கைகளில் உழண்று கொண்டிருந்த அம் மக்களுக்கு மருத்துவம், கல்வி, மற்றும் சுவிஷேசம், என்று சகலத்திலும் அவர்களுக்கு சேவை செய்து வந்தார்கள், கீச்சுவா இந்தியர்கள்(Quechua Indians);  அடர்காடுகளில் வாழும் ஆக்கா இந்தியர்களைக் குறித்து மிகவும் அஞ்சினார்கள், ஆக்கா இந்தியர்கள் மற்றவர்களுக்கு பயந்து அடர்காடுகளில் வசித்தார்கள், மிகவும் முரடர்கள், கொலை மட்டுமே அவர்களுக்குத் தெரிந்த ஒரே செயல், பிற இணத்தாரை மட்டுமல்ல தன் சொந்த மக்களையும் சிறிய காரணங்களுக்காக கொல்லக் கூடியவர்கள்.. ஆடையணியாத காட்டு மிராண்டிகள்... மரத்தினால் செய்யப்பட்ட ஈட்டிகளைக் கொண்டு பதுங்கித் தாக்கிக் கொல்வதில் வல்லவர்கள் ஈக்வேடாரின் சட்ட திட்டங்கள் எதுவும் அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை..

பரிசுப் பொருட்கள் வழங்குதல்
ஜிம் எலியட் உட்பட ஐவருக்கும் ஆக்கா இந்தியர்களைக் குறித்து கேள்விப்பட்ட நாளிலிருந்து அவர்களுக்கும் சுவிஷேசம் சொல்லி அத்தும ஆதாயம் செய்யவேண்டும் என வாஞ்சித்தார்கள்.. தங்களுடைய இந்த திட்டத்தை வெளியே சொன்னால் யாரும் அனுமதிக்க மாட்டார்கள் ஏனென்றால் இதற்கு முத்தையா நூற்றாண்டுகளில் மிஷனரிகளாகச் சென்ற யாரையும் ஆக்கா இந்தியர்கள் உயிருடன் விட்டதில்லை என அறிந்து தங்கள் மனைவிகளைத் தவிர வேறு யாரிடமும் இது குறித்து சொல்லவில்லை.. ஆக்கா என்றால் கீச்சுவா மொழியில் காட்டுமிராண்டி என்று பெயர், இந்த ஐவரும் ஒரு சிறு விமானத்தில் ஆக்கா இந்தியர்கள் வாழ்வதாகச் சொல்லப்படும் அடர்காடுகளில் பல நாட்கள் அலைந்து ஆக்கா குடியிருப்புகளைக் கண்டு பிடித்தார்கள். அம்மக்களின் குடியிருப்புகளுக்கு மேலாக வட்டமடித்து அவர்களின் கவனத்தை கவர்ந்தார்கள் ஆக்கா இந்தியர்களும் கூரை மேல் ஏறி இவர்களை வேடிக்கை பார்த்து ஆர்பரிப்பார்கள், மிஷனரிகள் அவர்களுக்கு ஆடைகள் மற்றும் கத்திகள் போன்றவற்றை மேலே விமானத்திலிருந்து வட்டமடித்த படியே கயிறுகள் வழியாக கூடையில் வைத்து இறக்குவார்கள் அடுத்த முறை ஆக்கா மக்கள் அந்த ஆடைகளை அணிந்திருப்பார்கள், அடுத்த முறை புது புது பொருட்களை பரிசாக கொடுப்பார்கள், ஒரு முறை ஒரு ஆக்கா இந்தியன் மிஷனரிகள் கயிறு மூலம் விமானத்திலிருந்து அனுப்பிய கூடையிலிருந்து பரிசுப்பொருட்களை எடுத்துக்கொண்டு, சுட்ட குரங்கின் வால் போன்ற சில உணவுப் பொருட்களை வைத்தான். இப்படியாக அவர்களுடனான நட்பு வளர்ந்தது,

ஆக்கா இந்தியர்களை சந்திக்கச் செல்லுதல்
கிச்சுவா இந்தியர்கள்(Quechua Indians) வாழ்ந்தபகுதியில் ஆக்கா இந்தியர்களிடமிருந்து தப்பி வந்த ஆக்கா இளம் பெண் டையுமா(Dayuma) என்பவரிடம்; ஆக்கா இந்தியர்கள் குறித்தும் அவர்களது கலாச்சாரம் மொழி போன்றவற்றை மிஷனரிகள் கற்றுக்கொண்டார்கள், ஆக்கா இந்தியர்கள் குடியிருப்பு அமைந்திருந்த குராரை (Curaray) ஆற்றங்கரை அருகில் சிறிய விமானத்தை இறக்க வசதியான இடம் ஒன்றில் விமானத்தைத் தரையிறக்கினார்கள்., அந்த அடர் காடுகளில் இறங்கி கிடைத்த சொற்பமான வசதிகளைக் கொண்டு ஒரு மரத்தில் வீடு ஒன்றை எளிமையாகக் கட்டிக்கொண்டார்கள், அருகாமையில் வாழும் கொலை செய்யும் ஆக்கா காட்டுமிராண்டிகளின் மொழியில் சுற்றும்முற்றும் நடந்தவாரே 'நாங்கள் உங்கள் நண்பர்கள்' என்று குரல் கொடுத்தார்கள்.,

முதல் ஆக்கா மனிதனை சந்தித்தல்
மிஷனரிகள் ஐவரும், குராரை ஆற்றங்கரையில் இறங்கிய செய்தியை தங்கள் மனைவிகள் தங்கியிருந்த இடத்திற்கு செய்தி சொல்லி மகிழ்ந்தார்கள், அப்போது ஆக்கா இந்தியர்களில் ஒரு வாலிபன் அடையணியாத இளம் பெண்கள் இருவரை கூட்டி வந்து மிஷனரிகளிடம் ஏதேதோ அவர்கள் மொழியில் பேசினான்., அந்தப் பெண்களை இவர்களிடம் விற்க முயன்றதாகத் தெரிகிறது, அதன் பிறகு வந்த ஆக்கா மனிதன் தன்னுடன் வந்த பெண்களைக் கூட்டிக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டான். மிஷனரிகள் முதல் ஆக்கா மனிதர்களை சந்தித்த மகிழ்ச்சியை கிட்டோவிலே தங்கியிருந்த தங்கள் மனைவிகளிடத்தில் ரேடியோ வழியே பகிர்ந்து கொண்டார்கள்., மீண்டும் மாலை நான்கு மணிக்கு தொடர்பு கொள்வதாகவும், விரைவில் வேறு ஆக்கா மக்களை சந்திக்க ஆவலாய் இருப்பதாகவும் சொன்னார்கள்.,

அடர்காடுகளுக்கு நடுவே விதைக்கப்பட்ட கோதுமை மணிகள்
ஜனவரி 8, 1956 ஆக்கா இந்தியர்களிடம் சுவிஷேசம் அறிவிக்க இரகசியமாக சென்ற ஜிம் எலியட் உட்பட ஐந்து மிஷனரிகளும், அடர் காடுகளுக்கு நடுவே போய் தரையிறங்கிய முதல் நாளின் மாலை வேளையில் சுமார் 60 மைல்கள் தொலைவில் சிறு நகரத்தில் வசிக்கும் தங்கள் மனைவிகளை ரேடியோ மூலம் தொடர்புகொள்வதாக சொல்லியிருந்தபடியால் கீட்டோ நகரில் இருந்த மனைவிகள் மாலை நான்கு மணிக்கு அவர்களின் அழைப்புக்காக ஆவலாய் காத்திருந்தார்கள், ஆனால் அழைப்பு எதுவும் வரவில்லை, மனைவிகள் மிஷனரிகளை தொடர்பு கொள்ள முயன்றார்கள்., ஆனால் பதில் எதுவும் வரவில்லை..

ரேடியோ ஏதாவது பழுதாகியிருக்கும் என்று காத்திருந்தார்கள், ஆனாலும் மௌனமே அந்த இளம் மனைவிகளுக்கு பதிலாகக் கிடைத்தது, அந்த இரவு முழுவதும் கலக்கம் நிறைந்த மௌனமே அந்த 5 இளம் மனைவிகளின் மொழியாக இருந்தாலும், அவர்களிடத்தில் தங்கி சிகிச்சை பெற்றுவந்த கிச்சுவா இந்தியர்களுக்கான மருத்துவ சேவையில் எந்த குறையையும் வைக்கவில்லை.,

மறுநாளும் எந்த பதிலும் வராததால் ஏதோ விபரீதம் என்று அறிந்து தங்கள் மிஷனுக்கு இந்தச் செய்தியை தெரியப்படுத்தினார்கள், மிஷனைச் சேர்ந்தவர்கள் ஈக்குவேடார் அரசாங்கத்தை தொடர்பு கொண்டார்கள், ஈக்குவேடார் அரசும், அமெரிக்க இராணுவமும் இணைந்து தேடும்பணியை மேற்கொண்டார்கள்., குராரே ஆற்றின் அருகே விமானம் ஒன்று சிதைக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தார்கள்., அங்கே மிஷனரிகளின் மனைவிகளோடு கூட சென்றார்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைக்கப்பட்டு அழுகிப்போயிருந்த நான்கு உடல்கள் அங்கொன்றும்  இங்கொன்றுமாக கண்டுபிடிக்கப்பட்டன.. அவர்கள் அங்கேயே விதைக்கப்பாட்டார்கள்..

ஆக்கா மக்களிடையே மாபெரும் எழுப்புதல்
கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்.(யோவான் 12:24) என்ற வேதவசனம் இந்த மிஷனரிகளின் வாழ்க்கையில் எத்தனை உண்மை என்பதை அறியும் வண்ணமாக, விதைக்கப்பட்ட மிஷனரிகள் அதோடு மறைந்து போகவில்லை., ஆம் அம் மக்கள் மீது அன்பு கொண்ட அந்த மிஷனரிமார்களின் மனைவிகள் மீண்டும் அமெரிக்காவுக்கு திரும்பிப் போய் சுகவாழ்வை அனுபவிக்க விரும்பவில்லை மாறாக ஈக்குவேடாரிலேயே தங்கினார்கள் ஆக்கா மக்களிடம் அருட்பனி செய்தார்கள்.,

காட்டுமிராண்டிகள் என்று அழைக்கப்பட்ட ஆக்கா மக்கள் கொலைத் தொழிலை விட்டு மெல்ல மனந்திரும்பினார்கள்., மிஷன்ரிகள் அந்த மக்களின் பெயரை கிச்சுவா மொழியில் காட்டுமிராண்டிகள் என்று பொருள்படும் ஆக்கா என்ற பெயரை  மாற்றினார்கள் இவர்களது தற்போதைய பெயர் ஹௌரனி(Huaorani) என்பதாகும்., இன்று இந்த மக்கள் இயேசு கிறிஸ்துவை உண்மையான தெய்வம் என்று ஏற்றுக்கொண்டார்கள் மாபெரும் எழுப்புதல் உண்டாகியிருக்கிறது


எலிசபெத் எலியட்
இன்றைக்கும் ஜிம் எலியட்டின் மனைவி எலிசபெத் எலியட் இந்த எழுப்புதல் அருட்பனிக்கு சாட்சியாய் வாழ்ந்துவருகின்றார்கள். அவர் எழுதிய Gateway to Joy, ‍ என்ற புத்தகம் உல்கப் புகழ் பெற்றதாகும், ஜிம் எலியட் மற்றும் மற்ற நால்வரின் வாழ்வின் நடந்த சம்பவங்களை அழகாக விளக்கியுள்ளது அந்தப் புத்தகம் மாத்திரமல்ல இதன் தொடர்ச்சியான புத்தகத்தில் ஆக்கா இந்தியர்கள் இரட்சிக்கப்பட்டதையும் விரிவாக விளக்குகின்றது., இந்தப்புத்தகம் தமிழிலும் வெளிவந்திருக்கிறது நூலின் பெயர்: மகிமையின் வாசல் வழியாய்  - ‍ எலிசபெத் எலியட் தற்போது எலிசபெத் எலியட் அம்மையார் மூப்பின் காரணமாக நேரடி ஊழியத்தில் ஈடுபடாமல் இனையதளம் மற்றும் மின்னனஞ்சல் வழியாக மக்களை சந்தித்து வருகின்றார்கள்

அம்மையாரின் இனைய தள முகவரி:http://www.elisabethelliot.org

Tuesday, April 15, 2014

கீர்த்தனைக் கவிஞர் ஜான் பால்மர் (1812-1883)

பெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே, ஓசன்னா பாடுவோம் ஏசுவின் தாசரே, இயேசுவே கிருபாசனப்பதியே, உன்றன் சுயமதியே நெறியென்றுகந்து சாயாதே... இந்த பாடல்களை அறிந்திராத கிறிஸ்தவர்கள் இலர் என்று சொல்லலாம். இந்த பாடல்களை இயற்றிய கன்னியாகுமரி மாவட்டக் கீர்த்தனைக் கவிஞர்களுள் முதன்மையானவரான ஜான் பால்மர்-ன் வாழ்க்கை வரலாறை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன். இவர் நாகர்கோவிலிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள மயிலாடி என்னும் ஊரில் 1812 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் நாள் பிறந்தார். இவ்வூரில் தான் தென் திருவிதாங்கூரின் முதல் சீர்திருத்த ஆலயம் 1809 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இச்சபை குமரி மாவட்டம் மற்றும் தென்கேரளத் திருச்சபைகளுக்குத் தாய்ச்சபையாக விளங்குகிறது. ஜான் பால்மரின் தந்தையார் ஞானப்பிரகாசம், தென்திருவிதாங்கூரின் முதல் கிறிஸ்தவரான மகாராசன் வேதமாணிக்கம் தேசிகரின் நெருங்கிய உறவினர். ஆனால் வேதமாணிக்கம் தேசிகரைப் போல் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளாதவர். வேதமாணிக்கம் தேசிகர் கன்னியாகுமரி மாவட்டத்தின் முதல் கிறிஸ்தவர் எனும் பெருமைக்குரியவர். இவருடைய அழைப்பின் பேரிலேயே தரங்கம்பாடியிலிருந்த ஜெர்மன் நாட்டு மிஷனெரி அருள்திரு. ரிங்கல்தௌபே மயிலாடிக்கு வந்து திருப்பணியாற்றினார் என்பது குறிப்பிடத் தக்கது. வேதமாணிக்கம் தேசிகரின் மரபில் வந்த பலரும் மிக உயர்வான நிலையை அடைந்ததுடன் இறைப்பணியுடன் கிறிஸ்தவ இலக்கியப் பணிகளும் செய்துள்ளனர். இவர்களுள் ஜான் பால்மர், தேவவரம் முன்ஷியார், அருள்திரு. சி. மாசிலாமணி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். வேதமாணிக்கம் தேசிகர் கிறிஸ்தவ சமயத்தைத் தழுவியதால் அவரை வெறுத் ஞானப்பிரகாசம் ஆத்திரமடைந்து வேதமாணிக்கம் தேசிகரைச் சாபமிட்டு அவருக்கு எட்டு நாட்களுக்குள் நல்லதொரு பாடம் கற்பிப்பதாகக் கூறினார்.

எட்டு நாட்களுக்குப் பின்பும் தனது சாபம் மகாராசன் வேதமாணிக்கம் தேசிகரை நெருங்காததால் ஆத்திரம் அடைந்த ஞானப்பிரகாசம் முப்பது நாட்களுக்குள்ளாக வேதமாணிக்கம் இவ்வுலகில் உயிருடன் இருக்கமாட்டார் என மீண்டும் சாபமிட்டார். முப்பது நாட்கள் கழிந்த பின்னரும் எதுவும் நடை பெறவில்லை. வேதமாணிக்கம் தேசிகரின் பின்னிலைமையானது முன்னிலைமையைக் காட்டிலும் ஆன்மீக உற்சாகத்துடன் சிறப்பாகவே அமைந்தது. எனவே, தம் தோல்வியை ஞானப்பிரகாசம் ஒப்புக்கொண்டார். மகாராசன் வேதமாணிக்கம் தேசிகரின் தெய்வமே உண்மையான தெய்வம் என்பதை உணர்ந்து இயேசு கிறிஸ்துவைத் தம் சொந்த மீட்பராக ஏற்றுக் கொண்டார். ஞானப்பிரகாசத்திற்குப் பால்மர் எனவும், அவரது மகனுக்கு ஜான் பால்மர் எனவும் அருள்திரு. ரிங்கல்தௌபேயால் திருமுழுக்குக் கொடுக்கப்பட்டது. ஜான் பால்மரின் தந்தையார் மிஷன் வயல்களுக்கு மேற்பார்வையாளராகப் பணிபுரிந்தார். இன்றும் இவரது குடும்பத்தினர் அனைவரும் தங்கள் பெயருடன் பால்மர் என்னும் பெயரை இணைத்துள்ளனர்.

கல்வி:
தமிழிலக்கியத்தில் தேர்ச்சி பெறத் தமிழ்ப் பண்டிதர் திருவம்பலத் திண்ணமுத்தம் பிள்ளையிடம் ஆரம்பக் கல்வியும் தொடர்ந்து நாகர்கோவில் இறையியல் பள்ளியில் திருமறைக் கல்வியும் பயின்றார். தமிழ், ஆங்கிலம், மலையாளம், வடமொழி மற்றும் கிரேக்க மொழி ஆகிய பாடங்கள் அங்கு கற்றுக் கொடுக்கப்பட்டன. ஜான் பால்மர் இறையியலில் அதிக நாட்டம் கொண்டு விளங்கியதால் அவர் தந்தை உயர் கல்விக்காகச் சென்னைக்கும் பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்த வேதசாஸ்திரக் கல்லூரிக்கும் அனுப்பி வைத்தார். உயர் கல்வியை முடித்து மயிலாடிக்குத் திரும்பிய ஜான் பால்மரை மிஷனெரி அருள்திரு. மால்ட் தமக்கு எழுத்தராக நியமித்தார். தொடர்ந்து நாகர் கோவிலில் புதிதாக நிறுவப்பட்ட அச்சுக்கூடத்தின் பணிகளைக் கவனிக்கும் பொறுப்பாளராகவும் நியமனம் செய்யப்பட்டார்.

ஆரம்பகாலப் பணி:
ஜான் பால்மர் 1830 ஆம் ஆண்டு ஜூலை ஐந்தாம் நாள் பேரின்பம் அம்மாளை வாழ்க்கைத் துணைவியாக்கினார். இத்தம்பதியர்க்கு இரண்டு ஆண் பிள்ளைகள் பிறந்தனர். நாகர்கோவிலில் மிஷனெரியாகப் பணி செய்து வந்த அருள்திரு. மால்ட்டுக்கு ஊழியத்தில் துணை செய்யும் பொருட்டு அருள்திரு. ஆடிஸ் அனுப்பப்பட்டபோது அவருக்குத் தமிழ் கற்றுக் கொடுக்கும் பணியில் அமர்த்தப்பட்டார். பின்னர் அருள்திரு. ஆடிஸ் அவர்களுடன் கோயம்புத்தூர் பகுதியில் நற்செய்தி ஊழியத்தை செய்து, ஓராண்டு நற்செய்தி ஊழியத்திற்குப் பின் குடும்பத்துடன் நாகர்கோவிலுக்குத் திரும்பினார். 1845 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் நாள் இலண்டன் மிஷன் சங்கத்தின் 50ஆவது ஆண்டு விழா மயிலாடியில் நடைபெற்றது. அச்சிறப்புத் திருநாளில் தாழ்த்தப்பட்ட மக்களிடம் ஊழியம் செய்வதற்காகக் "கெம்பீர சத்தம்"என்னும் குழு அமைக்கப் பட்டது. அக்குழுவில் ஜான் பால்மரும் உறுப்பினராய் இருந்தார். அக்குழுவின் முயற்சியினால் நாகர்கோவில் சேகரத்தின் வடபாகத்திலுள்ள புளிக்குடி, காட்டுப்புதூர்,ஞாலம், அரசன்குழி, தாழக்குடி என்னும் கிராமங்களில் சபைகள் நிறுவப் பட்டன. ஜான் பால்மர் கவிபாடுவதுடன் புதிய சபைகளை நிறுவி ஊழியமும் செய்து வந்தார்.

நற்செய்தி ஊழியம்:
பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியா முழுவதிலும் குறிப்பாகத் தென்திருவிதாங்கூர் பகுதியில் சாதிக்கொடுமை தலைவிரித்தாடியது. இதன் காரணமாக ஒடுக்கப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட மக்கள் கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்தனர். உயர்சாதிக்காரர்கள் என்று தங்களைக் கூறிக் கொண்டிருந்தவர்கள், ஏழை மக்கள் கிறிஸ்தவ மதத்தில் சேர்வதைப் பேரிழப்பாகக் கருதினர். இச்சூழலில், நாகர்கோவிலிலுள்ள கிருஷ்ணன் கோவில் என்னுமிடத்திற்கு நற்செய்தியைச் சொல்ல ஜான் பால்மர் சென்றார். உயர்சாதி எனத் தங்களைத் தாங்களே சொல்லிக் கொண்ட இந்துக்கள் அப்பகுதியில் அதிகமாக வாழ்ந்து வந்தனர். விக்கிரகங்கள் யாவும் கல், பித்தளை என்று ஜான் பால்மர் சொல்வதைக் கேட்ட அங்குள்ள பூசாரிக்குக் கோபம் ஏற்பட்டு இருவருக்கும் வாக்குவாதம் உண்டாயிற்று. எங்கள் தெய்வங்கள் உண்மையானவை என்பதை அறிந்து கொள்வாய் எனச் சூளுரைத்துச் சபித்தார். ஜான் பால்மர் பூசாரியின் சவாலை ஏற்றுக் கொண்டு வீடு திரும்பினார். பூசாரியின் கூற்றுப்படியே அன்றிரவு பேய் ஒன்று பயங்கரத் தோற்றத்துடன் ஜான் பால்மர் முன் தோன்றி "எங்கள் தெய்வங்களைப் பழித்தவன் நீ தானே" என்று அவரது கழுத்தில் தன் பத்து விரல்களையும் பதித்துக் கொல்ல முயன்றது. கவிஞர் உடனே பத்துக் கற்பனைகளை ஒன்றன்பின் ஒன்றாகச் சொல்ல, ஒரு கற்பனைக்கொரு விரலாக பேயின் விரல்கள் அகன்றதாம்.

கீர்த்தனைகள் பாடிய விதம்:
கீர்த்தனைகளை இயற்றுவதிலும், இராகங்களைக் கற்றுக் கொள்வதிலும் மிகுந்த ஆர்வம் கொண்ட ஜான் பால்மர் பக்திப் பரவசம் ஊட்டும் பாடல்களால் இறைவனை மகிமைப்படுத்தி வந்தார். திருவனந்தபுரத்திலுள்ள பத்மநாப சுவாமி கோவிலில் அதிகாலை நடக்கும் வழிபாட்டின்போது நாதசுர இசை ஒலிக்கும். அக்காலத்தில் சாதிக் கட்டுப்பாடும் மதவைராக்கியமும் உச்சகட்டத்தில் இருந்தன. ஜான்பால்மர் அக்கால இந்துமத ஆலய ஒழுங்குமுறையின்படி இந்துக் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படாத குலத்தைச் சார்ந்தவர். கீர்த்தனைகளை இயற்ற இராகம் மிகவும் இன்றியமையாதது. இராகங்களைக் கற்றுக் கொள்ள அதிகாலை வேளையில் தன் தலையைத் துணியால் மறைத்துக் கொண்டு கோயிலினுட் சென்று, பல புதிய இராகங்களைக் கற்று வந்து அதன் அடிப்படையில் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய கீர்த்தனைகளை இயற்றுவது இவரது வழக்கம். தம் உயிரையும் பொருட்படுத்தாது இறைமகன் இயேசு கிறிஸ்துவின் புகழ்பாட புதிய இராகங்களைக் கற்றுவந்த ஜான்பால்மரின் துணிச்சல் பாராட்டுக்குரியது.

ஜான் பால்மரின் மறைவு:
இத்தகைய இனிய படைப்புகளைக் கிறிஸ்தவத் தமிழ் உலகிற்குப் படைத்துத் தந்த ஜான் பால்மரின் முன்னோர்கள் பக்தி வைராக்கியம் மிகுந்த இந்துக்களாய் வாழ்ந்தவர்கள். சோதிடம்,மருத்துவம், இலக்கியம் போன்ற கலைகளில் ஆழ்ந்த அறிவும் ஈடுபாடும் உடையவர்கள். இவர்கள் தொன்மை வாய்ந்த ஒடுக்கப் பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். பல தலைமுறைகளுக்கு முன்னரே காவிரி பாயும் தஞ்சை பகுதியிலிருந்து திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வல்ல நாட்டுப் பகுதியில் சென்று குடியேறியவர்கள். பின்னர் அங்கிருந்து நாஞ்சில் நாட்டுப் பகுதியான மயிலாடிக்குக் குடிபெயர்ந்தனர். வைதீக இந்துக் குடும்பத்தில் பிறந்த ஜான் பால்மரை மகத்துவம் மிக்கக் கீர்த்தனைக் கவிஞராக மாற்றியது மயிலாடி மண்.. எளிய இனிய கிறிஸ்தவக் கீர்த்தனைகளை எழுதிக் கொண்டும், கர்த்தரின் புகழ் பாடிக் கொண்டும் இருந்த கவிஞர் 1883 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 2 ஆம் நாள் தன்னுடைய 71 ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார்.

Monday, April 14, 2014

யூத மிஷனரி சாலமோன் கின்ஸ்பர்க் (Solomon Ginsburg) 1867-1927

யூதர்களின் அறிவு நிலைய சங்கமாக திகழ்ந்த போலந்து தேசத்தில், சுவால்க்கி என்னும் ஊரில், 1867ம் வருடம் ஆகஸ்ட் 6ம் தேதி யூத ரபிக்கும், பக்தி மிகுந்த யூத பெண்ணிற்கும் மகனாய் பிறந்தார் சாலமோன் கின்ஸ்பர்க். 18 ம் நூற்றாண்டில் போலந்து தேசம் ரஷ்ய அரசின் ஆளுகையில் இருந்தமையால் படிப்பிற்கான வசதிகள் குறைவாக காணப்பட்டது. சாலமோன் 6 வயதாக இருக்கும் போதே அவரது தாயாருக்கு அவரை ஜெர்மனியில் படிக்க வைக்கவேண்டுமென ஆவல் கொண்டார். ஆனால் யூத ரபியான அவரது தகப்பனோ யூத மத கலாச்சாரத்தில் அவரை வளர்த்து அவரையும் யூத ரபியாக உருவாக்க ஆவல் கொண்டார். தாயாரின் வற்ப்புறுத்துதலால் ஜெர்மனி சென்று, பல கப்பல்களுக்கு அதிபதியான தனது தாத்தா வீட்டில் 14 வயது வரை தங்கி படித்து பின்பு போலந்து சென்றார் சாலமோன்.

ஏசாயா 53 ல் சொல்லப்பட்டுள்ள “அவர்” யார்?:
அது கூடாரப்பண்டிகை தினம். யூத ரபிகள் சாலொமோனின் வீட்டில் கூடினார்கள். வேதாகம சம்பவங்களின் அடிப்படையில் ஆராய தொடங்கினார்கள். ஏசாயா 53 ம் அதிகாரத்திற்கு நேராய் விவாதம் சென்றது. அறைக்கு வெளியிலிருந்து கேட்டுகொண்டிருந்த சாலொமோன் கின்ஸ்பர்க் அறைக்குள்ளே நுழைந்தார். ஏசாயா 53 ம் அதிகாரத்தில் பெருபாலும் வந்துள்ள “அவர்”, “அவரை”, “அவருக்கு”, “அவர்மேல்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த “அவர்” யார்? என்று தகப்பனிடம் கேட்டார். சினமடைந்த தகப்பன் கன்னத்தில் ஒரு அறையை பதிலாய் அளித்தார். இவனை இப்படியே விடக்கூடாது என்று சொல்லி, யூதரகளுக்கான பயிற்சி பள்ளியில் சாலொமோனை சேர்த்தார்.

லண்டனில் இயேசுவை எற்றுகொள்ளுதல்:
இந்த சூழ்நிலையில் பெற்றோருக்கு தெரியாமல் லண்டன் சென்று தூரத்து உறவினர் வீட்டில் தங்கி வேலை தேடும் முயற்சியில் இறங்கினார் சாலொமோன். ஒருநாள் வீட்ற்க்கு திரும்புகையில் யூத கிறிஸ்தவர் ஒருவரை வழியில் சந்தித்தார். அவர் அன்று மாலை தன்னுடைய வீட்டில் ஏசாயா 53 அதிகாரத்தை மைய்யமாக கொண்ட வேதபாட வகுப்பு நடக்க இருப்பதாய் தெரிவித்தார். ஏசாயா 53 ம் அதிகாரத்தில் பெருபாலும் வந்துள்ள அந்த “அவர்” யார்? என்ற கேள்விக்கு பதிலறியும் ஆரவ்த்தில் அந்த வகுப்பிற்கு சென்றார். அந்த “அவர்” இயேசு கிறிஸ்துவே என்றும் அவரே மேசியா என்றும் அவருக்கு தெளிவான பதில் கிடைத்தது. அப்பொழுதே இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு அதை வெளிப்படையாக அறிக்கையும் செய்தார். சாலொமோனுடைய உறவினர்கள் இந்த செய்தியை அவருடைய பெற்றோருக்கு தெரிவித்தார்கள்.

சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கினார்:

சாலொமோனுடைய பெற்றோர் அவருக்கு மிகவும் பிரியமான மாமா ஒருவரை இயேசு கிறிஸ்துவின் மீது சாலொமோன் கொண்டுள்ள விசுவாசத்தை கைவிட்டு தன்னோடு அழைத்து வரும்படி லண்டனுக்கு அனுப்பியிருந்தனர். சாலொமோனோ தன்னுடைய கிறிஸ்துவ விசுவாசத்தை கைவிட மறுத்துவிட்டார். இறுதியில் அந்த மாமாவும் அவரோடு வந்திருந்த யூத ரபிகளும் சாலொமோனை சுற்றி நின்று உபாகமம் 28 ம் அதிகாரத்தில் 16 ம் வசனம் முதல் 68 ம் வசனம் வரை சொல்லப்பட்டுள்ள சாபங்களை ஒருமித்து பாட்டாக பாடி பல முறை அவரை சபித்தனர். இதை கேட்க கேக்க சாலொமோனுடைய உள்ளத்தில் பயம் ஆட்கொண்டது. இந்த நிலையில் திடீரென்று சிலுவையில் அறையுண்ட இயேசுவை தரிசனத்தில் கண்டார். அந்த சிலுவைக்கு மேல் பளிச்சென்று மின்னுகிற ஒரு வசனத்தை கண்டார். “கிறிஸ்து நமக்காக சாபமாகி நியாப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக் கொண்டார்” கலா 3:13 என்ற வசனம் தான் அது. உள்ளத்தில் இருந்த பயம் நீங்கி மகிழ்ச்சி பொங்கியது. குடும்ப உறவு முறிபட கிறிஸ்துவே அவருக்கு தகப்பனாய் மாறினார். யூதர்கள் இரண்டு முறை அவரை கொள்ள முயன்று தாக்கினர். மரணம் ஏற்படாமல் கர்த்தர் காப்பாற்றினார். பின்னர் லண்டனிலுள்ள பிரிசிபிட்டேரியன் மிஷன் (PRESBYTERIAN MISSION) ஆலயத்தில் ஞானஸ்நானம் பெற்றார்.

பிரேசிலுக்கு மிஷனரியாய் சென்ற சாலமோன் கின்ஸ்பர்க்:
ஒரு நாள் இந்தியாவில் இருந்து வந்திருந்த மிஷனரியை சந்தித்து பேசிகொண்டிருக்கையில் மிஷனரி தாகம் சாலொமோனுக்கும் ஏற்ப்பட்டது. பிரேசில் நாடு கத்தோலிக்கர்கள் மிகுந்த நாடு. அந்த நாட்டிற்க்கு சத்தியத்தை அறிவிக்க தன்னை அர்ப்பணித்தார். அங்கு சென்ற சிறிது நாட்களிலேயே பிரேசில் மொழியை நன்கு கற்றுக்கொண்டார். பின்னர் கத்தோலிக்கர்களின் சிலை வணக்கத்தைக் கண்டித்து பேச ஆரம்பித்தார். “தூய பேதுரு போப் அல்ல” என்றும் “கந்தையும் எலும்புமான மதம்” என்ற தலைப்பில் கத்தோலிக்க சபைக்கு எதிராக கைப்பிரதிகள் அச்சிட்டு விநியோகம் செய்தார். கத்தோலிக்க பாதிரியார்கள் அவர் மீது சினம் அடைந்து அவரைக் கொலை செய்ய முயன்றனர். எல்லா வித தீமையினின்றும் இயேசு அவரைக் காத்துக் கொண்டார். எதிர்ப்புகள் சோதனைகள் மத்தியில் சத்தியமாகிய இயேசுவை தைரியமாய் கூறி அநேக மிஷன் மைய்யங்களை உருவாக்கினார்.

தெளிப்பு ஞானஸ்நானமும் முழுக்கு ஞானஸ்நானமும்:

இங்கிலாந்தின் சபை (Church of England) வழக்கத்தின்படி மக்களுக்கு தெளிப்பு ஞானஸ்நானம் (Sparkling Babtism) கொடுத்து வந்தார் சாலமோன் கின்ஸ்பர்க். இந்த நிலையில் பேப்டிஸ்ட் மிஷனரிகள் அவரை சந்தித்து, தெளிப்பு ஞானஸ்நானம் கொடுப்பது சரியானதல்ல என்பதையும், முழுக்கு ஞானஸ்நானமே (Immersion Babtism) சரியானது என்றும் வேத ஆதாரத்தோடு விளக்கினார்கள். தெளிப்பு ஞானஸ்நானமே சரி என்று நம்பியிருந்த சாலொமோனுடைய கண்களை கர்த்தர் திறந்தார். தான் தெளிப்பு ஞானஸ்நானம் கொடுத்த மக்கள் அனைவருக்கும் முழுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார். இதை அறிந்த இங்கிலாந்து சபை சாலமோன் கின்ஸ்பர்க்கை கடுமையாக கண்டித்தது. இங்கிலாந்து சபையிலிருந்து வந்த கடிதத்திற்கு பின்வருமாறு பதில் எழுதினார், “ஞானஸ்நானத்தை குறித்து வேதத்தின் அடிப்படையில் அறிந்து கொள்ளும் நல்ல வாய்ப்பு எனக்கு கிடைத்தது. வேதத்தின் பழைய ஏற்ப்பாட்டில் எலிசா தீர்க்கதரிசி குஷ்டரோகியாகிய நாகமானை யோர்தான் நதியில் “ஏழுதரம் ஸ்நானம் பண்ணு” (2 இரா 5:1௦) என்று சொன்னதை வாசிகின்றோம். தேவனுடைய மனுஷன் சொன்னபடி யோர்தானில் எழுதரம் முழுகின பொழுது அவன் சுத்தமானான் (வ.14) என்று வாசிகின்றோம். இதைப் பற்றி எபிரேய கிரேக்க மொழி வல்லுநர் டாக்டர். டேவிட் சி. கின்ஸ்பர்க் (Doctor. David C. Ginsburg) இவ்வாறு கூறியுள்ளார். பழைய ஏற்ப்பாட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள மூழ்கி ஞானஸ்நானம் செய்தல் என்ற அதே எபிரேய வார்த்தை தான் புதிய ஏற்பாடில் கிரேக்க மொழியிலும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றார். ஆகவே இதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது” என்று கூறினார். இந்த நிலையில் இங்கிலாந்து சபை அவருக்கு அளித்து வந்த உதவியையும் தொடர்பையும் துண்டித்தது. லண்டனில் அவருக்கு நியமிக்கப்பட்டிருந்த பெண்ணும், திருமண நியமத்தை முறிக்க போவதாக கடிதம் எழுதினால். எனினும் தனது கோட்பாடிலிருந்து சற்றேனும் விலகவில்லை சாலமோன் கின்ஸ்பர்க். “வேதத்தை ஆராய்ந்து படி. முழுக்கு ஞானஸ்நானமே வேடம் அங்கிகரிக்கும் முறை என்பதை உன்னால் விளங்கி கொள்ள முடியாவிட்டால், நமது திருமண நியமத்தை முறித்து கொள்ளலாம்” என்று எந்த தயக்கமுமின்றி பதில் எழுதினார்.

பிரேசில் நாட்டில் மிஷனரிப் பணி:
பிரேசில் நாட்டின் கிராமங்கள் தோறும் சுற்றித் திரிந்து இயேசு கிறிஸ்துவே ஆண்டவர் என்று போதித்து அநேக மக்களை இயேசுவண்டை நடத்தினார் சாலமோன் கின்ஸ்பர்க். சிறைச் சாலைகளுக்கு சென்று கைதிகளுக்கு வேதத்தை போதித்து அநேகரை மனம் திரும்ப செய்தார். இயேசு கிறிஸ்துவின் அன்பை முதன்மைப்படுத்தி பேசி அநேகரை இரட்சிப்பிற்க்குள் வழிநடத்தினார். தனிமனிதனாக உள்ளூர் கிராம மக்களின் துணையோடு அநேக சபைகளை நிறுவினார். 35 வருட்ங்கள் இவர் செய்த மிஷனரி பணியினால் பாவத்திலும் விக்கிரக ஆராதனையிலும் சிக்குண்டிருந்த அநேக மக்கள் இயேசு கிறிஸ்துவின் அன்பை அறிந்துகொண்டு தங்கள் பாவங்களிலிருந்து விடுதலை பெற்றனர். 1927ம் வருடம் ஏப்ரல் 1ம் தேதி தான் மிஷனரி பணி செய்த பிரேசில் நாட்டிலேயே கோதுமை மணியாய் வீழ்ந்தார்.

நன்றி
Word of GOD